பா.ஜ.க தொண்டர்கள் கருப்பு கொடி! பீகாரில் போட்டியிடும் மத்திய அமைச்சருக்கு சிக்கல்

அந்த தொகுதி மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு வழங்கப்பட்டது. பாட்னா சாஹிப் தொகுதி ஒதுக்கப்பட்டதற்கு பிறகு, ரவி சங்கர் பிரசாத் முதன்முறையாக இன்று தொகுதிக்கு சென்றார்.

Web Desk | news18
Updated: March 26, 2019, 7:19 PM IST
பா.ஜ.க தொண்டர்கள் கருப்பு கொடி! பீகாரில் போட்டியிடும் மத்திய அமைச்சருக்கு சிக்கல்
கருப்பு கொடி காட்டிய பா.ஜ.கவினர்
Web Desk | news18
Updated: March 26, 2019, 7:19 PM IST
மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், தான் போட்டியிடும் பாட்னா சாஹிப் தொகுதிக்குச் செல்லும்போது அவருக்கு பா.ஜ.கவினரே கருப்பு கொடி காட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

பீகார் மாநிலம் பாட்னா சாஹிப் தொகுதியின் தற்போதைய எம்.பியாக சத்ருஹன் சின்ஹா இருந்துவருகிறார். அவர், பா.ஜ.கவுடன் கடும் கருத்து வேறுபாடு கொண்டு செயல்பட்டுவருகிறார்.

ரவிசங்கர் பிரசாத்


பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்தும், காங்கிரஸை பாரட்டியும் வருகிறார். எனவே, அந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பா.ஜ.கவின் மாநிலங்களவை எம்.பி ஆர்.கே.சின்ஹா எதிர்பார்த்திருந்தார். ஆனால், அந்த தொகுதி மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு வழங்கப்பட்டது. பாட்னா சாஹிப் தொகுதி ஒதுக்கப்பட்டதற்கு பிறகு, ரவி சங்கர் பிரசாத் முதன்முறையாக இன்று தொகுதிக்கு சென்றார்.

பாட்னா விமான நிலையம் வந்த ரவி சங்கர் பிரசாத்துக்கு, பா.ஜ.க எம்.பி ஆர்.கே.சிங்கின் ஆதரவாளர்கள் கருப்பு கொடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், ஆர்.கே.சிங் ஆதரவாளர்களுக்கும், ரவி சங்கர் பிரசாத் ஆதரவாளர்களுக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை, விமானநிலையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதனால், அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை.

Also see:

First published: March 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...