2014-ல் தேர்தல் வெற்றிக்காக பாஜக என்னைப் பயன்படுத்தியது – அன்னா ஹசாரே பகீர்!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டு மக்களை தவறாக வழிநடத்தி வருகிறது என்றார் அன்னா ஹசாரே.

news18
Updated: February 4, 2019, 7:10 PM IST
2014-ல் தேர்தல் வெற்றிக்காக பாஜக என்னைப் பயன்படுத்தியது – அன்னா ஹசாரே பகீர்!
அன்னா ஹசாரே
news18
Updated: February 4, 2019, 7:10 PM IST
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வெற்றிக்காக பாஜக என்னைப் பயன்படுத்தியது என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.

லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதிகளை நியமிக்க கோரியும், விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க கோரியும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகாராஷ்டிர மாநிலம், அகமத்நகர் அருகே காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

உண்ணாவிரதத்தின் 6-ம் நாளான இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக என்னைப் பயன்படுத்திக் கொண்டது உண்மைதான். லோக்பால், லோக் ஆயுக்தா அமைக்க வேண்டி நான் நடத்திய போராட்டங்களின் காரணமாகத் தான் மத்தியில் பாஜகவும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியும் ஆட்சிக்கு வந்தன. இதை அனைவருமே நன்றாக அறிவார்கள். தற்போது அக்கட்சிகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.


பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டு மக்களை தவறாக வழிநடத்தி வருகிறது. எனது கோரிக்கைகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்டதாக மகாராஷ்டிரத்திலுள்ள பாஜக அரசு கூறுகிறது. ஆனால், இது தவறான தகவலாகும் என்றார் அன்னா ஹசாரே.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை போராட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிப்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, 'இப்போராட்டத்தில் கேஜ்ரிவால் கலந்துகொண்டால் வரவேற்பேன். ஆனால், அவர் என்னுடன் சேர்ந்து மேடையில் அமர்வதை அனுமதிக்க மாட்டேன்’ என்றார் அன்னா ஹசாரே.

Also watch

Loading...

First published: February 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...