முகப்பு /செய்தி /இந்தியா / ரூ.800 கோடிக்கு 40 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க சதி செய்த பாஜக - அரவிந்த் கெஜ்ரிவால் பகீர் புகார்

ரூ.800 கோடிக்கு 40 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க சதி செய்த பாஜக - அரவிந்த் கெஜ்ரிவால் பகீர் புகார்

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் 40 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி டெல்லியில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி திட்டம் தீட்டியதாக அரவிந்த் கெஜ்ரிவால் பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் அவசர கூட்டம் நடைபெற்றது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆம் ஆம்தி எம்எல்ஏக்கள் 62 பேரில் 53 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்காத எம்எல்ஏக்கள் தாங்கள் தொலைபேசி வாயிலாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதை ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சௌரப் பரத்வாஜ் தெரிவித்தார்.

முன்னதாக டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியவுக்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிபிஐ சோதனை நடத்தியது. இது பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறிய மனிஷ் சிசோடியா, இதில் இருந்து தப்பிக்க தன்னை பாஜகவில் சேர்ந்து கொள்ள பேரம் நடைபெற்றதாகவும் அவர் பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும், தங்கள் எம்எல்ஏக்கள் அஜய் தத், சஞ்சீவ் ஜா, சோம்னாத் பாரதி, குல்தீப் ஆகியோரை பாஜக தலைவர்கள் அணுகியுள்ளனர். அவர்களை பாஜகவில் சேரக் கூறி ரூ.20-25 கோடி வரை பேரம் பேசப்பட்டுள்ளது. இதை நாங்கள் எதிர்கொள்ளத் தயார். குஜராத் தேர்தல் வரை இதுபோன்ற ரெய்டு, மிரட்டல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் என்று அக்கட்சி குற்றஞ்சாட்டியது.

இதையும் படிங்க: 5 செல்போன்களில் உளவு பொருள் இருந்தது, ஆனால்.. பெகாசஸ் வழக்கில் நிபுணர் குழு அறிக்கை தாக்கல்

இதைத் தொடர்ந்து கட்சி எம்எல்ஏக்களின் அவசர கூட்டம் இன்று நடைபெறும் என ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்தார். இதை அடுத்து இந்த கூட்டத்தில் 62 எம்எல்ஏக்கள் நேரிலும் மற்றவர்கள் தொலைபேசி வாயிலாகவும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த சூழல் குறித்து முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில், "சுமார் 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுக்கு பாஜக வலை வீசியது. இதற்காக மொத்தம் 800 கோடி ரூபாய் தொகையை பாஜக வைத்து பேரம் பேசியுள்ளது. மனிஷ் சிசோடியாவுக்கு முதலமைச்சர் பதவி தருவதாக ஆசை காட்டி கட்சியை உடைத்து ஆட்சி மாற்றம் செய்ய பாஜக சதி திட்டம் செய்தது.  ஆனால் மனிஷ் சிசோடியா இதற்கு மயங்கவில்லை. அவரை போன்றவரை பெற்றது நமது பேறு." என புகழாரம் சூட்டினார்.

இந்த கூட்டம் முடிந்தபின் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் அரவிந்த் கேஜ்ரிவால் தனது கட்சி எம்எல்ஏக்களுடன் அஞ்சலி செலுத்தினார்.

First published:

Tags: Aam Aadmi Party, Arvind Kejriwal, BJP