ராஜஸ்தானில் 14ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆட்சியைக் கவிழ்க்கும் பாஜகவின் முயற்சி தோல்வி என முதலமைச்சர் அசோக் கெலாட் கருத்து

சச்சின் பைலட் சமரசமானதால் ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக வீசி வந்த அரசியல் புயல் கரையைக் கடந்துள்ளது. ஆட்சியை கவிழ்க்கும் பாஜகவின் முயற்சி தோல்வியடைந்து விட்டதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் 14ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆட்சியைக் கவிழ்க்கும் பாஜகவின் முயற்சி தோல்வி என முதலமைச்சர் அசோக் கெலாட் கருத்து
அசோக் கெல்லாட், சச்சின் பைலட்
  • Share this:
ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் இடையே மோதல் வெடித்தது. தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேருடன் தனியார் சொகுசு விடுதியில் முகாமிட்ட பைலட், கெலாட்டுக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை என்றும் தெரிவித்தார். சச்சின் பைலட்டின் துணை முதலமைச்சர் பதவியும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டன.

கலகக்குரல் எழுப்பி வந்த சச்சின் பைலட், திங்கட்கிழமை திடீரென காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார். சுமார் 2 மணிநேரம் நீடித்த ஆலோசனையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் பங்கேற்றார். அப்போது பைலட்டின் குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர்கள் உரிய முறையில் தீர்வு காணப்படும் என உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் எழுப்பிய பிரச்னைகளுக்கு தீர்வு காண பிரியங்கா காந்தி, அகமது படேல், கே.சி. வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டது. இவர்கள் சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்களை சந்தித்து அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தனர்.


Also read: மருத்துவமனையில் கூடுதல் சுகாதார பணியாளர்களை நியமிக்க கிரண்பேடி தடையாக உள்ளார் - புதுவை அமைச்சர் காட்டம்

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட், கெலாட்டை மதிப்பதாகவும், ஆனால் செயல்பாடுகள் தொடர்பாக கேள்வி எழுப்ப தனக்கு உரிமை உள்ளதாகவும் தெரிவித்தார். தங்களது கருத்துகளை ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் அக்கறையோடு கேட்டதாகவும், பிரச்னைகளை தீர்ப்பதாக உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.

சச்சின் பைலட் மீண்டும் திரும்பியது குறித்து கருத்து தெரிவித்துள்ள அசோக் கெலாட், ஆட்சியை கவிழ்க்கை பாஜக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டதாகவும், ஆனால் இறுதியாக ஒரு எம்எல்ஏ கூட தங்களை விட்டு செல்லவில்லை என்றும் அவர் கூறினார்.இதனிடையே, இன்று நடைபெறவிருந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சச்சின் பைலட் காங்கிரசுக்கே திரும்பியுள்ளதால் வரும் 14ம் தேதி நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் கெலாட் எளிதாக வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
First published: August 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading