ஃபேஸ்புக்கில் அதிக செலவில் விளம்பரம் செய்த அரசியல் கட்சிகளில், பாஜக முதலிடம்..

ஃபேஸ்புக் ட்ராக்கர் தரவுகள்

முதல் 10 இடங்களில் உள்ள மற்ற 4 விளம்பரதாரர்களும் பாஜகவுடன் தொடர்புடையவை. அந்த நான்கு விளம்பரதாரர் நிறுவனங்களில் மூன்றுக்கு ஒரே முகவரி எனவும் ட்ராக்கர் தெரிவித்துள்ளது.

 • Share this:
  ஃபேஸ்புக்கில் அதிக செலவில் அரசியல் விளம்பரம் செய்த இந்திய அரசியல் கட்சிகளில், பாஜக மீண்டும் முதலிடத்தில் உள்ளது. 

  2019-ஆம்  ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையிலான ஒன்றரை ஆண்டுகளில் மொத்தம் 4 கோடி, 61,00000 ரூபாயை பாஜக விளம்பரங்களுக்காக செலவழித்துள்ளது.

  ஒரு கோடியே 84,00000 ரூபாய் செலவழித்துள்ள காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதிகம் செலவு செய்ததில் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற 4 விளம்பரதாரர்களும் பாஜகவுடன் தொடர்புடையவை. அந்த நான்கு விளம்பரதாரர் நிறுவனங்களில் மூன்றுக்கு ஒரே முகவரி எனவும் ட்ராக்கர் தெரிவித்துள்ளது.  அந்த நிறுவனங்களையும் கணக்கில் சேர்த்தால் பாஜகவின் மொத்த செலவு 10 கோடியே 17 லட்சம் ரூபாயாக உயர்ந்து விடும். முதல் 10 இடங்களில் உள்ள ஆம் ஆத்மி கட்சி 69 லட்சம் ரூபாயை விளம்பரத்திற்காக செலவிட்டுள்ளது.

  மேலும் படிக்க : 15 கிமீ தொலைவில் கேட்கும் ஒலி.. 2100 கிலோ எடை.. அயோத்தி ராமர் கோவில் மணியை வடிவமைத்த இஸ்லாமியர் இக்பால்..

  ஃபேஸ்புக்கைப் பொறுத்தவரை, ஒரு விளம்பரம், வேட்பாளராலோ, அரசியல் கட்சியாலோ அல்லது அதைச் சார்ந்த ஒருவராலோ அளிக்கப்பட்டால் “சமூக விஷயங்கள், தேர்தல்கள் மற்றும் அரசியல்” என வகைப்படுத்தப்படுகிறது. அதுஅந்த குறிப்பிட்ட தேர்தலைப் பொறுத்தது எனவும், அரசியல் விளம்பர கொள்கைகளால் முறைப்படுத்தப்படுவதாகவும், உள்நாட்டு விஷயமாகவும் குறிப்பிடப்படுகிறது.

   
  Published by:Gunavathy
  First published: