பா.ஜ.க தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! அருண் ஜெட்லி தகவல்

வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: April 8, 2019, 7:58 AM IST
பா.ஜ.க தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! அருண் ஜெட்லி தகவல்
வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Web Desk | news18
Updated: April 8, 2019, 7:58 AM IST
மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். முதல்கட்ட வாக்குப்பதிவு 11-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தாமதமாக தேர்தல் அறிக்கையை வெளியிடுவதை சாதகமான அம்சமாக பா.ஜ.க கருதுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, 3 முக்கிய கருத்துகளை முன்வைத்து பா.ஜ.க தனது பரப்புரையை மேற்கொள்ளும் என்றார்.

செயல்படும் அரசு, நேர்மையான அரசு மற்றும் மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுக்கும் அரசு ஆகிய 3 கருத்துகளை முன்னிறுத்தி இன்று வெளியாக உள்ள பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை அமையும் என்றும் அவர் தெரிவித்தார். அதோடு  பா.ஜ.கவின் பரப்புரை பாடல் ஒன்றையும் வெளியிட்டார். கடந்த கால வரலாற்றிலும் பா.ஜ.க கடைசி நேரத்திலேயே தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு வந்துள்ளது.

2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 20-ம் தேதி தொடங்கியது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை மார்ச் 22-ம் தேதி வெளியிட, பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை 17 நாட்கள் தாமதமாக ஏப்ரல் 8-ம் தேதி வெளியிட்டது. அதாவது தேர்தலுக்கு 12 நாட்கள் முன்பாக வெளியிட்டது.

2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை காங்கிரசுக்கு பிறகே வெளியிட்டது. மார்ச் 24-ம் தேதி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட, பா.ஜ.க ஏப்ரல் 3-ம் தேதி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் இது தொடர்ந்தது. மார்ச் 26-ம் தேதி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட, ஏப்ரல் 7-ம் தேதிதான் பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியானது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 7-ம் தேதி அன்றுதான் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த முறை பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பெற்று நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது.

இதுமட்டுமின்றி 2017-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் போதும், தேர்தலுக்கு முந்தைய நாளன்றே பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
Loading...
இதனிடையே வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் அறிக்கை வெளியிடுவது வாக்காளர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் செயல் என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கடந்த 2014-ம் ஆண்டு புகாரளித்தது.

இதனை பரிசீலித்த தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிடக் கூடாது என தற்போது உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே மக்களவைத் தேர்தலுடன் நடைபெற உள்ள ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கைகளை பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நேற்று வெளியிட்டன. பா.ஜ.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அக்கட்சியின் தலைவர் அமித்ஷா, ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த முறை மிகப்பெரிய மாற்றம் நிகழப் போவதாகவும், ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்தை காங்கிரஸ் கட்சியே இயக்கி வருவதாகவும் தெரிவித்தார்.

Also see... பா.ஜ.க கூட்டணியின் பலம்; பலவீனம்? ஒரு பார்வை

Also Read... அரசியல் தலைவர்கள் மீதான இளம் தலைமுறையின் மதிப்பீடுகள் என்ன?


Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...