“டெம்ப்ளேட் எடுத்தீங்களே... க்ரெடிட் கொடுத்தீங்களா...?” பாஜக மீது ‘டெக்னிக்கல்’ புகார்

இணையதளத்தில் இருந்த தகவல்களின் பேக்அப் இல்லாததால் அக்கட்சியால் இணையதளத்தை பழைய நிலைக்கு கொண்டு வரமுடியவில்லை.

news18
Updated: March 25, 2019, 4:16 PM IST
“டெம்ப்ளேட் எடுத்தீங்களே... க்ரெடிட் கொடுத்தீங்களா...?” பாஜக மீது ‘டெக்னிக்கல்’ புகார்
பாஜக இணையதளம்
news18
Updated: March 25, 2019, 4:16 PM IST
பாஜக இணையதளம் நீண்ட முடக்கத்திற்குப் பின்னர் தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், அக்கட்சி பயன்படுத்தியுள்ள டெம்ப்ளேட் தங்களுடையது என்று ஆந்திராவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் புகார் அளித்துள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக தேர்தல் வேலைகளில் பிஸியாக இருந்தாலும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அக்கட்சியின் இணையதளம் முடக்கப்பட்டது. உடனே சரிசெய்யப்படும் என்று கூறப்பட்டாலும், பல நாட்களாகியும் அது முடங்கியே இருந்தது.

இணையதளத்தில் இருந்த தகவல்களின் பேக்அப் இல்லாததால் அக்கட்சியால் இணையதளத்தை பழைய நிலைக்கு கொண்டு வரமுடியவில்லை. இதனால், வெறும் வேட்பாளர் பட்டியல் மட்டும் இருக்கும் வண்ணம் ஒரே ஒரு பக்கத்தை வைத்து இணையதளத்தை மீண்டும் அக்கட்சி கொண்டு வந்தது.ஆனால், அந்த புதிய இணையதள பக்க வடிவமைப்பு தான் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேசம் மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த w3layouts.com என்ற நிறுவனம், மற்ற நிறுவனங்கள் விளம்பரம் செய்வதற்கு வசதியாக இலவச HTML டெம்ப்ளேட்டுகளை அளிக்கிறது. அந்த டெம்ப்ளேட்டுகளை யார் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து அவர்களுக்கு ஏற்றார்போல இணையதளத்தை வடிவமைத்துக்கொள்ளலாம்.

ஆனால், அவர்களது இலவச டெம்ப்ளேட்டுகளை பயன்படுத்த வேண்டுமெனில் அவர்களது நிறுவனத்துக்கு க்ரெடிட் கொடுக்கவேண்டும் என்பது விதிமுறையாகும். இந்நிறுவனத்தின் டெம்ப்ளேட்டை பயன்படுத்தியுள்ள பாஜக, அதற்கான க்ரெடிட் கொடுக்கவில்லை.

இது குறித்து w3layouts.com சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “எங்கள் நிறுவனத்தில் இலவச டெம்ப்ளேட்டை பயன்படுத்தியுள்ள பாஜக, எங்களுக்கு க்ரெடிட் கொடுக்காமல் அதனை எடுத்துள்ளது. பாஜக இணையதளைத்தை பராமரிக்கும் குழுவிடம், தங்கள் நிறுவனத்தின் நிபந்தனைகளை படிக்க சொல்லுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also See....

First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...