முகப்பு /செய்தி /இந்தியா / உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் - சமாஜ்வாதி கோட்டைகளான ராம்பூர், அசாம்கர் தொகுதிகளை கைப்பற்றிய பாஜக

உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் - சமாஜ்வாதி கோட்டைகளான ராம்பூர், அசாம்கர் தொகுதிகளை கைப்பற்றிய பாஜக

உ.பி இடைத்தேர்தலில் பாஜக வெற்றி

உ.பி இடைத்தேர்தலில் பாஜக வெற்றி

ராம்பூர் மற்றும் அசாம்கர் ஆகிய தொகுதிகள் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் கோட்டைகளாகக் கருதப்படுபவை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியாகின. இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர், அசாம்கர் ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ராம்பூர் மற்றும் அசாம்கர் ஆகிய தொகுதிகள் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் கோட்டைகளாகக் கருதப்படுபவை. இரு தொகுதிகளும் இதுவரை சமாஜ்வாதிக்கு சொந்தமாக இருந்த நிலையில் இந்த தேர்தலில் இரு தொகுதிகளும் பாஜக வசம் சென்றுள்ளது.

அசாம்கர் தொகுதியின் எம்பியாக இருந்தவர் அகிலேஷ் யாதவ். இவர் அன்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எதிர்க்கட்சி தலைவரான நிலையில், அசாம்கர் எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல், ராம்பூர் தொகுதியிலும் மற்றொரு சமாஜ்வாதி கட்சி தலைவரான அசாம்கான் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற காரணத்தால் எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், இரு தொகுதிகளிலும் நடைபெற்ற இடைத்தேர்தலில் அசாம்கர் தொகுதியில் அகிலேஷ் யாதவின் உறவினர் தர்மேந்திர யாதவ் சமாஜ்வாதி சார்பில் களம் கண்டார். அதேபோல், ராம்பூர் தொகுதியில் அசாம்கானுக்கு நெருக்கமான அசிம் ராஜா சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டார். தேர்தல் முடிவில், அசாம்கர் தொகுதியில் பாஜக வேட்பாளர் தினேஷ் லால் யாதவ் நிராஹுவா, சமாஜ்வாதி வேட்பாளர் தர்மேந்திராவை சுமார் 11 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கொண்டார். அதேபோல், ராம்பூர் தொகுதியிலும் பாஜக வேட்பாளர் கியான்ஷியாம் சிங் லோதி 42,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதையும் படிங்க: பஞ்சாப் இடைத்தேர்தல் - முதலமைச்சர் தொகுதியிலேயே ஆம் ஆத்மி அதிர்ச்சி தோல்வி

இந்த வெற்றியானது வளர்ச்சிக்கான இரட்டை என்ஜின் அரசுகளுக்கு மக்கள் கொடுத்த வெற்றி பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதன்மூலம் சமாஜ்வாதி கட்சியின் கோட்டைகளாகக் கருதப்பட்ட இரு தொகுதிகளை பாஜக தன்வசமாக்கியுள்ளது.

First published:

Tags: BJP, PM Modi, Uttar pradesh, Yogi adityanath