உன்னாவ் பாலியல் வழக்கில் சிக்கிய எம்எல்ஏ குல்தீப் சிங்கை கட்சியிலிருந்து நீக்கியது பாஜக

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25,00,000 உத்தர பிரதேச மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Web Desk | news18-tamil
Updated: August 1, 2019, 8:30 PM IST
உன்னாவ் பாலியல் வழக்கில் சிக்கிய எம்எல்ஏ குல்தீப் சிங்கை கட்சியிலிருந்து நீக்கியது பாஜக
பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர்
Web Desk | news18-tamil
Updated: August 1, 2019, 8:30 PM IST
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள எம்எல்ஏவை கட்சியிலிருந்து பாஜக நீக்கியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்குகளை டெல்லி சிபிஐ நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் விபத்துக்குள்ளானது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு நடைபெற்றது.


அப்போது,  அப்பெண் விபத்துக்குள்ளான வழக்கை விசாரிக்க எவ்வளவு நாள் வேண்டும் என கேள்வி எழுப்பினார். அதற்கு ஒரு மாதம் வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டது. அதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, 7 நாட்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காவல் இருந்த 3 காவலர்களை பணியிடை நீக்கம் செய்தும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாக விமானம் மூலம் அழைத்து வந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Loading...

இதனிடையே பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரை கட்சியில் இருந்து பாஜக நீக்கியுள்ளது.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகள் அனைத்தையும், உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்குகளின் மீது தினந்தோறும் விசாரணை நடத்தி 45 நாட்களில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25,00,000 உத்தர பிரதேச மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Also Watch:  மனைவியிடம் மன்னிப்பு கேட்ட டம்மி ரவுடி..! 
First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...