முகப்பு /செய்தி /இந்தியா / முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து - பாஜக செய்தித் தொடர்பாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம்

முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து - பாஜக செய்தித் தொடர்பாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம்

செய்தித் தொடர்பாளர்கள் மீது பாஜக நடவடிக்கை

செய்தித் தொடர்பாளர்கள் மீது பாஜக நடவடிக்கை

குறிப்பாக வளைகுடா நாடுகளில் இந்திய பொருள்களை புறக்கணிப்போம் என சமூக வலைத்தளத்தில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

  • Last Updated :

முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிந்தால் ஆகிய இருவரின் மீது அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக தனித் தனியே இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நுபுர் சர்மாவுக்கு அனுப்பியுள்ள நோடீஸ்சில், உங்களின் கருத்து கட்சியின் சட்ட விதிகளுக்கு எதிரானது. எனவே, இது தொடர்பாக உங்கள் மேல் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், நீங்கள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறீர்கள் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் மற்றொரு செய்தித் தொடர்பாளர் நவீன் ஜிந்தாலுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ்சில், நீங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்து கட்சியின் அடிப்படை கொள்கை மற்றும் சட்டத்திற்கு எதிரானது. எனவே, நீங்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறீர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக நுபுர் சர்மா டிவி விவாதம் ஒன்றில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசினார். நுபர் சர்மா மீத மகாராஷ்டிரா காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதேபோல் நவீன் ஜிந்தால் தனது ட்விட்டர் பதிவில் நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்டிருந்தார். இதற்கு இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் சர்ச்சை கிளம்பியது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இந்திய பொருள்களை புறக்கணிப்போம் என சமூக வலைத்தளத்தில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

நுபுர் சர்மா மீது பாஜக நடவடிக்கை

இந்நிலையில், எந்தவொரு மதத்தையும் அவமதிப்பதை பாஜக ஏற்காது என அக்கட்சி பொதுச் செயலாளர் அருண் சிங் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்த சர்ச்சை கருத்து தெரிவித்த இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். கட்சியின் இந்த நடவடிக்கை குறித்து இருவரும் இதுவரை எந்த எதிர்வினையும் தெரிவிக்கவில்லை.

top videos
    First published:

    Tags: BJP, Controversial speech, Hindu Muslim issues