தீபாவளி மாதிரி இருந்துச்சி... உற்சாகத்தில் துப்பாக்கியால் சுட்டேன்...! பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் தலைவர்

தீபாவளி மாதிரி இருந்துச்சி... உற்சாகத்தில் துப்பாக்கியால் சுட்டேன்...! பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் தலைவர்
மஞ்சு திவாரி
  • News18
  • Last Updated: April 6, 2020, 5:12 PM IST
  • Share this:
பிரதமர் மோடி நேற்றிரவு, விளக்கு ஏற்றச் சொல்லியிருந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் பாஜக மகளிரணி தலைவர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நேற்று இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்ற வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று நாட்டின் பல பகுதிகளில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.

எனினும், பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் பால்ராம்புர் மாவட்டத்தின் பாஜக மகளிரணி தலைவரான மஞ்சி திவாரி என்பவர் நேற்றிரவு துப்பாக்கியால் சுட்டு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக உள்ளூர் ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், “வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது பலர் பட்டாசுவெடித்துக்கொண்டிருந்தனர். தீபாவளி மாதிரி இருந்தது.. அதனால் உற்சாகத்தில் துப்பாக்கியால் சுட்டேன்” என்று கூறியிருந்தார்.

மேலும், மஞ்சு திவாரியை சஸ்பெண்ட் செய்து பாஜக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading