Home /News /national /

மனோகர் பாரிக்கரின் மகனுக்கு சீட் தர மறுத்த பாஜக - ஆதரவுக்கரம் நீட்டும் கெஜ்ரிவால்

மனோகர் பாரிக்கரின் மகனுக்கு சீட் தர மறுத்த பாஜக - ஆதரவுக்கரம் நீட்டும் கெஜ்ரிவால்

Utpal Parrikar

Utpal Parrikar

மனோகர் பாரிக்கரின் மகனுக்கு பாஜகவால் சீட் மறுக்கப்பட்டது கோவா அரசியலில் பரபரப்பாகி இருக்கிறது.

    கோவா முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான மறைந்த மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கருக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்த நிலையில்  தங்கள் கட்சியில் இணையுமாறு  அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.

    கோவா உட்பட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. கோவா மாநிலத்துக்கான 34 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று பாஜக வெளியிட்டது. இதில் மனோகர் பாரிக்கரின் தொகுதியான பனாஜி, அவரின் மகன் உத்பல் பாரிக்கருக்கு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக சிட்டிங் எம்.எல்.ஏவான Atanasio Monserrateவுக்கு மீண்டும் பனாஜி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மனோகர் பாரிக்கரின் மகனுக்கு பாஜகவால் சீட் மறுக்கப்பட்டது கோவா அரசியலில் பரபரப்பாகி இருக்கிறது. அதே நேரத்தில் பாரிக்கர் மகனை ஆம் ஆத்மிக்கு வருமாறு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “பாரிக்கர் குடும்பத்துடன் கூட பா.ஜ.க யூஸ் அண்ட் த்ரோ கொள்கையை கடைப்பிடித்ததை அறிந்து கோவா மக்கள் வருத்தம் கொள்கிறார்கள். மனோகர் பாரிக்கரை நான் எப்போதும் மதிக்கிறேன். உத்பாலை, ஆம் ஆத்மி கட்சிக்கு வரவேற்கிறேன். ஆம் ஆத்மி சார்பில் தேர்தலில் போட்டியிடுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.



    இதற்கிடையே கோவா அமைச்சரான விஸ்வஜித் ரானே இந்த விவகாரம் குறித்து தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ஒருவரின் மகன் என்பதற்காகவே பாஜக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காது. முதலில் கட்சிக்காக வேலை பாருங்கள். கற்றுக் கொள்ளுங்கள். பின்னர் தேர்தல் களத்துக்கு வாருங்கள். நானும் கூட எடுத்தவுடன் இந்த இடத்துக்கு வந்துவிடவில்லை,. படிப்படியாக கட்சிப் பணியாற்றியே இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்.

    Also read:  கர்ப்பிணி வனத்துறை அதிகாரியின் முடியை பிடித்து இழுத்து தரையில் போட்டு கொடூர தாக்குதல் - வீடியோ

    என்னுடைய தனிப்பட்ட அறிவுரை என்னவென்றால் உங்களின் தந்தை பாஜகவை வளரச்செய்தவர். அவர் வளர்த்த கட்சிக்கு எதிராக புரட்சி செய்யாமல் இருங்கள்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Published by:Arun
    First published:

    Tags: BJP, Goa, Manohar parrikar

    அடுத்த செய்தி