‘கலகக்காரர்’ சத்ருகன் சின்காவை கழற்றிவிட்ட பாஜக... காங்கிரசில் இணைய முடிவு...!

Lok Sabha Election 2019 | பாட்னா சாகிப் தொகுதியைப் பொறுத்தவரை சத்ருகன் சின்காவுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

news18
Updated: March 23, 2019, 4:15 PM IST
‘கலகக்காரர்’ சத்ருகன் சின்காவை கழற்றிவிட்ட பாஜக... காங்கிரசில் இணைய முடிவு...!
சத்ருகன் சின்கா
news18
Updated: March 23, 2019, 4:15 PM IST
பீகார் மாநிலத்தில் பாஜக எம்.பியாக இருந்த சத்ருகன் சின்காவுக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது, அவரின் பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை சந்திக்க உள்ளது.

கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட தற்போது 18 தொகுதிகளில் மட்டுமே பாஜக போட்டியிட உள்ளது. பாலிவுட் நடிகரும் பாட்னா சாகிப் தொகுதி எம்.பியாகவும் இருந்த சத்ருகன் சின்கா, தொடக்கம் முதலே மோடியையும், மத்திய அரசையும் விமர்சித்து வந்தார்.

Read Also... வயநாட்டில் போட்டியிடுகிறாரா ராகுல் காந்தி? கேரளாவில் கிளம்பிய பரபரப்பு!

இதனால், வரும் தேர்தலில் அவருக்கு சீட் ஒதுக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது. பாஜக இன்று வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் எதிர்பார்த்தது போலவே அவரின் பெயர் இல்லை. எனினும், சத்ருகன் சின்கா காங்கிரசில் இணைந்து அதே தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

பிரதமர் மோடியுடன் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்


ராகுல் காந்தி முன்னிலையில் அவர் காங்கிரசில் இன்று இணைய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தெரிந்து கொண்ட பாஜக, பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ரவி சங்கர் பிரசாத் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
Loading...
பாட்னா சாகிப் தொகுதியைப் பொறுத்தவரை சத்ருகன் சின்காவுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. சத்ருகன்சின்கா, வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also See....

First published: March 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...