பாஜகவுக்கு நான் வேண்டுமா, நிதிஷ் வேண்டுமா?: செண்டிமெண்ட்டாக அட்டாக் செய்யும் சிராக் பஸ்வான்!

சிராக் பஸ்வானின் செண்டிமெண்ட் அட்டாக்!

தேஜஸ்வி யாதவ் உடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்குமா என கேட்டபோது, என்னுடைய தந்தையும், லாலு பிரசாத் யாதவும் நண்பர்கள். தேஜஸ்வியும், நானும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். அவர் எனக்கு தம்பி போன்றவர் என்றார் சிராக் பஸ்வான்.

  • Share this:
பாஜகவுக்கு நான் வேண்டுமா அல்லது நிதிஷ் குமார் வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று லோக் ஜன சக்தி கட்சியைச் சேர்ந்த சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார். மேலும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவுடன், சிராக் பஸ்வான் கூட்டணி அமைப்பது குறித்தும் சில தகவல்களை கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் லோக் ஜனசக்தி கட்சியினை வழிநடத்தி வந்த நிலையில் அவருடைய உறவினரான பசுபதி குமார் பராஸ் உள்ளிட்ட சில எம்.பிக்கள் திடீரென சிராக் பஸ்வானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். மேலும் கட்சியின் தேசிய தலைவராகவும், கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராகவும் சிராக் பஸ்வான் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பசுபதி குமார் பராஸ் நியமிக்கப்பட்டார்.

தனக்கு எதிராக கட்சியினரின் இந்த நடவடிக்கையினால் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ள சிராக் பஸ்வான், இந்த பிரச்னையில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Also Read:  Ind v Eng: இங்கிலாந்து அணியின் பலவீனங்கள்: மைக்கேல் வாகனின் மேட்ச் கணிப்பு!

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சிராக் பஸ்வான், “சிஏஏ, என்.ஆர்.சி உள்ளிட்ட பாஜகவின் ஒவ்வொரு நடவடிக்கையின் போதும், நிதிஷ் குமார் எதிராக இருந்த போதிலும் நான் ஆதரவாக இருந்தேன். தற்போது பாஜகவுக்கு நான் வேண்டுமா அல்லது நிதிஷ் வேண்டுமா என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது நான் மோடியின் அனுமன் என கூறினார். இன்றும் அதே நிலைப்பாட்டில் பேசிய சிராக் பஸ்வான், ராமாயனத்தில் ராமரின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் அனுமன் உடன் இருந்தார். அதே போல பிரதமர் நரேந்திர மோடிக்கு, லோக் ஜனசக்திக்கு அனுமன் போல உடன் இருந்தது. அனுமன் கொல்லப்படும் போது ராமர் அமைதியாக இருப்பது சரியாக இருக்காது. தற்போது எங்கள் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியில் பிரதமர் தலையிட்டு சரிசெய்ய வேண்டும். ஆனால் பிரதமர் அமைதி காப்பது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் இதில் தலையிடுவார் என நம்புகிறேன்.

Also Read:    பெண் போலீசை பாலியல் வன்புணர்வு செய்த மாமனார்: கேள்விப்பட்டு முத்தலாக் கொடுத்த போலீஸ் கணவர்!

எல்லோருக்கும் தெரியும் எங்கள் கட்சியின் இந்த நெருக்கடிக்கு யார் காரணம் என்று. நிதிஷ் குமார் எங்கள் கட்சியில் முதல் முறையாக குழப்பத்தை ஏற்படுத்தவில்லை. 2015லும் இதையே தான் செய்தார். இது அவரின் வழக்கம் தான் என சிராக் பஸ்வான் கூறினார்
அதிருப்தியில் இருந்து வரும் சிராக் பஸ்வானை தங்கள் பக்கமாக இழுக்க ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் முயன்று வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேஜஸ்வி யாதவ் உடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்குமா என கேட்டபோது, என்னுடைய தந்தையும், லாலு பிரசாத் யாதவும் நண்பர்கள். தேஜஸ்வியும் , நானும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். அவர் எனக்கு தம்பி போன்றவர். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுப்பேன் என கூறினார் சிராக் பஸ்வான்.
Published by:Arun
First published: