126 தொகுதிகள், துணை முதலமைச்சர் பதவி - மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா இடையே தொகுதி பங்கீடு

126 தொகுதிகள், துணை முதலமைச்சர் பதவி - மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா இடையே தொகுதி பங்கீடு
தேவேந்திர பட்நாவிஸ் | உத்தவ் தாக்கரே
  • News18
  • Last Updated: September 27, 2019, 9:59 AM IST
  • Share this:
சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள மகாராஷ்டிராவில் ஆளும் பாரதிய ஜனதா, சிவசேனா இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த மாதம் 21-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் பாரதிய ஜனதா - சிவசேனா கூட்டணி இடையே தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதில் கடந்த ஒரு வாரமாக இழுபறி நீடித்து வந்தது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாதி தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வலியுறுத்தியது.

அதோடு முதலமைச்சர் பதவியையும் இரண்டரை வருடங்களுக்கு தங்களுக்கு தர வேண்டும் என்றும் சிவசேனா கோரிக்கை வைத்திருந்தது. அதனை பாரதிய ஜனதா ஏற்கவில்லை. அதனால் இழுபறி நீடித்து வந்த நிலையில் பாரதிய ஜனதா 144 இடங்களிலும், சிவசேனா 126 இடங்களிலும் போட்டியிட ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மீதமுள்ள 18 தொகுதிகள் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சிவசேனாவுக்கு துணை முதலமைச்சர் பதவியைத் தரவும் பாரதிய ஜனதா ஒப்புக் கொண்டுள்ளது. மும்பையில் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற பாஜக முக்கியத் தலைவர்களின் கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது.

நாளை மறுநாள் மும்பையில் பாஜக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து தொகுதிப் பங்கீடு விவரங்களை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார்கள். கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக 122 இடங்களிலும், சிவசேனா 63 இடங்களிலும் வென்றன. தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்த நிலையில் பின்பு சிவசேனா ஆட்சியில் பங்கேற்றது.

First published: September 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading