ஹோம் /நியூஸ் /இந்தியா /

ராமரிடம் இருந்து சீதையை பாஜக பிரித்து விட்டது - ராஜஸ்தான் முதலமைச்சர் கருத்து

ராமரிடம் இருந்து சீதையை பாஜக பிரித்து விட்டது - ராஜஸ்தான் முதலமைச்சர் கருத்து

அசோக் கெலாட்

அசோக் கெலாட்

மக்களிடம் பயத்தையும் கோபத்தையும் விதைத்து ஜெய் ஸ்ரீராம் என்று பாஜகவினர் கோஷமிட வைக்கிறார்கள் என அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rajasthan, India

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் சுகாதாரத்துறை நலத்திட்டங்களை இன்று தொடங்கி வைத்த முதலமைச்சர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை குறித்தும் பாஜகவின் அரசியல் குறித்து கருத்து தெரிவித்தார். அசோக் கெலாட் கூறியதாவது, "பாஜக சாதி, இனம் மற்றும் மதங்களின் பெயர்களை வைத்து தேர்தல் ஆதாயம் தேடுவதை மக்கள் நன்கு புரிந்து வருகிறார்கள். பாஜகவினர் இது போன்ற மோசடி விளையாட்டுகள் மூலம் வெற்றி பெற்று வருகிறார்கள்.

மக்களிடம் பயத்தையும் கோபத்தையும் விதைத்து ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட வைக்கிறார்கள். ஜெய் சியாராம் என்று அவர்கள் ஏன் கூறுவதில்லை. அவர்கள் சீதா தேவியை கூட ராமரிடம் இருந்து பிரித்து விட்டார்கள். அதானல் தான் நாங்கள் ஜெய் சியாராம் கோஷமிடுமாறு கூறுகிறோம். மக்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ராகுல் காந்தி அன்னல் காந்தியின் நெறிகளை பின்பற்றி, அச்சத்தை அன்பின் மூலம் வெற்றிகொள்கிறார்" என்றார்.

ராகுல் காந்தி நாடு தழுவிய பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை தென்மாநிலங்கள், பின்னர் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை அடைந்து, ராஜஸ்தான் வழியாக டெல்லியை அடைந்துள்ளது. தனது பயணத்தின் போது பாஜகவின் செயல்பாடுகளை விமர்சித்த ராகுல், பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் பெண்களை ஒடுக்கும் வேலையை செய்து வருகிறது என்று குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: இந்து- இஸ்லாமியர் வெறுப்பை தூண்டி மக்களை பாஜக திசை திருப்புகிறது - டெல்லியில் ராகுல் விமர்சனம்!

அக்கட்சியில் பெண்களுக்கு உரிய இடமில்லை என்று கூறிய ராகுல் காந்தி, "ஜெய் சியாராம் என்று கூறாமல், சீதையை நீக்கி ஜெய் ஸ்ரீராம் என்று அவர்கள் முழக்கமிடுகிறர்கள். இதில் இருந்தே சீதையையும் நாட்டின் பெண்களையும் அவமதிக்கும் இவர்களின் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம்" என்று விமர்சித்தார்.

First published:

Tags: Ashok Gehlot, BJP, Rahul gandhi