ஹோம் /நியூஸ் /இந்தியா /

EXclusive:பேரறிவாளன் விடுதலைக்கு மத்திய அரசின் தவறே காரணம் - சுப்பிரமணியன் சுவாமி

EXclusive:பேரறிவாளன் விடுதலைக்கு மத்திய அரசின் தவறே காரணம் - சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணியன் சுவாமி

Subramaniyan Swamy Exclusive: பேரறிவாளனின் விடுதலைக்கு மத்திய அரசின் தவறே காரணம். அந்த தவற்றை ஆதாரமாகக் கொண்டு பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பேரறிவாளன் விடுதலைக்கு மத்திய அரசின் தவறே காரணம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசு உரிய நேரத்தில் மனுக்கள் மற்றும் ஆவணங்களை  தாக்கல் செய்யவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

  இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நியூஸ்18 தமிழ்நாடு ஊடகத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், பேரறிவாளன் விடுதலையானது சிறையில் இருந்துதான், குற்றத்தில் இருந்து அல்ல. பேரறிவாளன் விடுதலையில் சதி நடந்துள்ளது என நினைக்கிறேன். மத்திய அரசின் கருத்து என்ன என்று உச்ச நீதிமன்றம் மூன்றுமுறை கேட்டது. மனுவை தாக்கல் செய்யவும் கூறியது. ஆனால் நமது அரசாங்கம் செய்யவே இல்லை.

  பேரறிவாளனின் விடுதலைக்கு மத்திய அரசின் தவறே காரணம். அந்த தவற்றை ஆதாரமாகக் கொண்டு பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. அரசியல் சாசன பிரிவு 142 யை இந்த விவகாரத்தில் பயன்படுத்த முடியாது’ என்று தெரிவித்துள்ளார். ஐந்து மாநில முதல்வர்கள் தனக்கு ராஜ்ய சபா சீட் தர முன்வந்துள்ளனர் என்றும் தனது இந்து மறுமலர்ச்சி கொள்கையை ஆதரித்து, சுதந்திரமாக செயல்படவிட்டால் சீட்டை ஏற்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

  ' isDesktop="true" id="747785" youtubeid="IxgIlfk1Mj8" category="national">

  முன்னதாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  இருந்து தன்னை விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கில் , 142வது பிரிவின் கீழ் தனக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அவரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Central government, Perarivalan, Subramanian Swamy, Supreme court judgement