• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நீண்ட நாட்களுக்கு பிறகு கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்வானி! தொண்டர்கள் உற்சாகம்

நீண்ட நாட்களுக்கு பிறகு கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்வானி! தொண்டர்கள் உற்சாகம்

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறுவது குறித்து நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

  • Share this:
    பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி நீண்ட நாட்களுக்கு பிறகு கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.

    பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 300-க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். டெல்லியில் விவசாயிகள் போராட்டம், இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட படுதோல்வி உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறுவது குறித்து நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர். கடந்த 2019-ல் கொரோனா ஏற்பட்டதை தொடர்ந்து தற்போதுதான் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.



    இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டனர்.



    மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் இந்த இருவரும் கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதோடு, பொது வெளியில் தங்கள் முகம் காட்டியுள்ளனர். இந்த நிகழ்வு பாஜக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.



    அத்வானி நீண்ட நாட்களாக பொது வெளியில் பங்கேற்காமல் இருந்தார். அவரது உடல்நிலை குறித்து கேள்விகள் எழுந்த நிலையில், நேற்று அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் செயற்குழுவில் பங்கேற்றுள்ளார்.

    கூட்டத்தின்போது கொரோனா பிரச்னையை சிறப்பாக கையாண்டதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதையொட்டி, பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், 'ஆரோக்கியமாக, நீண்ட நாட்கள் அத்வானி அவர்கள் வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். மக்களை வலிமைப்படுத்தவும், கலாசாரத்திற்கு பெருமை சேர்க்கவும் பல தியாகங்களை அத்வானி செய்துள்ளார். இதற்காக நாடு அவருக்கு கடன்பட்டுள்ளது.' என்று கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: