• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 2014-ஐ விட அதிக இடங்களில் வென்ற பாஜக

2014-ஐ விட அதிக இடங்களில் வென்ற பாஜக

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 303 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து, வரும் 26-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற பாஜக, தனிப்பெரும்பான்மையுடன் 2-வது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை வரும் 26-ம் தேதி சந்தித்து ஆட்சி அமைக்க பிரதமர் நரேந்திர மோடி உரிமை கோரவுள்ளார்.

17வது மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி

வேலூர் தொகுதியைத் தவிர்த்து, நாடு முழுவதும் உள்ள மற்ற 542 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி முதல் கடந்த 19-ம் தேதி வரை தேர்தல் நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

303 இடங்களில் வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மை

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்தது. கடந்த தேர்தலில் சிவசேனா, தெலுங்குதேசம், தேமுதிக, பாமக, உள்பட 28 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக, மொத்தம் 336 இடங்களில் வெற்றிபெற்றது.

இதில் பாஜக தனித்து 282 இடங்களில் வெற்றிபெற்றபோதிலும், கூட்டணி ஆட்சி அமைத்து 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்தது. இதேபோல், தற்போதைய தேர்தலிலும் சிவசேனா, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், பாமக, தேமுதிக உள்பட 19 கட்சிகளுடன் கூட்டணி வைத்து, தேர்தலில் போட்டியிட்ட பாஜக, 303 இடங்களில் வெற்றிபெற்று, 2-வது முறையாக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி

பாஜக கூட்டணி மொத்தம் 353 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று, பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழந்த காங்கிரஸ் கட்சி, தற்போதைய தேர்தலில் வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் திமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களைப் பெற்றுள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து, அமித் ஷா போட்டியிட்ட, குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்ற பாஜக, தற்போது 19 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக கொல்கத்தாவில் உள்ள ஹவுரா மேம்பாலத்தில் பாஜக-வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

வயநாடு தொகுதி

இதனிடையே, வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றிபெற்றதை அடுத்து, காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் பிரதமர் மோடி

இந்நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 303 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து, வரும் 26-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். அப்போது, பாஜக மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ள பிரதமர் மோடி, அடுத்த ஓரிரு நாட்களில் பதவியேற்பார் என கூறப்படுகிறது.

Also see... பாஜக வெற்றிக் கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போட்ட பெண்கள்

Also see...




தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: