Home /News /national /

எஸ்டிபிஐ, பாஜக மாநில நிர்வாகிகள் கொலையால் அதிரும் கேரளா... ஆழப்புழாவில் 144 தடை உத்தரவு...

எஸ்டிபிஐ, பாஜக மாநில நிர்வாகிகள் கொலையால் அதிரும் கேரளா... ஆழப்புழாவில் 144 தடை உத்தரவு...

கேரளாவில் சட்டம் ஒழுங்கு பினராயி விஜயன் ஆட்சியில் சீர்கேடு அடைந்திருப்பதாகவும், நடந்திருக்கும் 2 கொலைகளும் திட்டமிட்டு நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கேரளாவில் சட்டம் ஒழுங்கு பினராயி விஜயன் ஆட்சியில் சீர்கேடு அடைந்திருப்பதாகவும், நடந்திருக்கும் 2 கொலைகளும் திட்டமிட்டு நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கேரளாவில் சட்டம் ஒழுங்கு பினராயி விஜயன் ஆட்சியில் சீர்கேடு அடைந்திருப்பதாகவும், நடந்திருக்கும் 2 கொலைகளும் திட்டமிட்டு நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

    கேரளாவில் 12 மணி நேரத்திற்குள்ளாக நடந்த 2 அரசியல் படுகொலைகள் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. எஸ்டிபிஐ, பாஜக கட்சிகளின் மாநில நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, 144 தடை உத்தரவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    கேரளாவில் சட்டம் ஒழுங்கை பினராயி விஜயன் அரசு காக்கத் தவறி விட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    கேரளாவில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளராக இருப்பவர் கே.எஸ். ஷான். ஆழப்புழா மாவட்டம் மன்னஞ்சேரி பகுதியில் நேற்றிரவு ஷான் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்று, பைக்கை இடித்துள்ளது. இதில், ஷான் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து காரில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல், ஷானை சரமாரியாக வெட்டியுள்ளது. மருத்துவமனையில் சில மணி நேரம் உயிருக்கு போராடிய ஷான் நள்ளிரவு 12.45 மணியளவில் உயிரிழந்தார்.

    இதுகுறித்து பேட்டியளித்த எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநில தலைவர் எம்.கே. பைஜி, ஷான் கொல்லப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ்., பாஜகவே காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த சம்பவத்தால் கேரளாவின் பல பகுதிகளில் நள்ளிரவு முதல் பதற்றம் காணப்பட்டது.

    இந்த நிலையில், பாஜக ஓபிசி பிரிவின் மாநில செயலாளரும், வழக்கறிஞருமான ரஞ்சித் சீனிவாசன், இன்று காலை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். 40 வயதாகும் ரஞ்சித், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது பாஜக சார்பாக ஆழப்புழா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டவர்.

    இதையும் படிங்க :கேரளாவில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் வெட்டிப் படுகொலை... பாஜக மீது குற்றச்சாட்டு

    நேற்று எஸ்டிபிஐ மாநில நிர்வாகி கொல்லப்பட்ட நிலையில், இன்று பாஜக மாநில நிர்வாகி கொல்லப்பட்ட சம்பவம் கேரளாவின் பல பகுதிகளில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. பழிக்குப்பழியாக ரஞ்சித் சீனிவாசன் கொலை நடந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரஞ்சித்தின் கொலைக்கு எஸ்டிபிஐ காரணம் என்று, பாஜக தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம் செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்துள்ளார். பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் சம்பவம் நடந்த ஆழப்புழா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, கேரளாவில் சட்டம் ஒழுங்கு பினராயி விஜயன் ஆட்சியில் சீர்கேடு அடைந்திருப்பதாகவும், நடந்திருக்கும் 2 கொலைகளும் திட்டமிட்டு நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

     
    Published by:Musthak
    First published:

    அடுத்த செய்தி