Home /News /national /

''ஆம் ஆத்மி வளர்ச்சியை பார்த்து பாஜக பயந்துவிட்டது'' - டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தாக்கு

''ஆம் ஆத்மி வளர்ச்சியை பார்த்து பாஜக பயந்துவிட்டது'' - டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தாக்கு

manish sisodia

manish sisodia

Amit Shah Announcement on Chandigarh | சண்டிகரில் உள்ள அரசு பணியாளர்களுக்கு, மத்திய அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகை, பலன்கள் உள்ளிட்டவை வழங்கப்படும்.

    ஆம் ஆத்மியின் வளர்ச்சியைப் பார்த்து பாஜக பயந்து விட்டதாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா விமர்சித்துள்ளார்.

    பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வரலாறு காணாத வெற்றியை பெற்ற நிலையில், அதன் தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகர் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி சண்டிகரில் உள்ள அரசு பணியாளர்களுக்கு, மத்திய அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகை, பலன்கள் உள்ளிட்டவை வழங்கப்படும். இந்த அறிவிப்பு ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் என்று அமித் ஷா அறிவித்தார்.

    உள்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு சண்டிகரில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான மனிஷ் சிசோடியா விமர்சனம் செய்துள்ளார்.

    இதையும் படிங்க -  பெண்ணின் உடையை நாள் முழுவதும் அணியும் ஆண்கள்... கேரளாவில் வினோத கோவில் திருவிழா

    இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், '2017 முதல் 2022 வரையில் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் சண்டிகர் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் தற்போது பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தவுடன் சண்டிகர் அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் அறிவிக்கிறார். ஆம் ஆத்மியின் வளர்ச்சியைப் பார்த்து பாஜக பயந்து விட்டது' என்று கூறியுள்ளார்.

    மத்திய அரசு சட்டங்கள் சண்டிகர் அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என்ற அறிவிப்பை பஞ்சாபின் முக்கிய கட்சியான சிரோன்மணி அகாலி தள கட்சி எதிர்த்துள்ளது.

    இதையும் படிங்க -   சாலையில் திடீரென பற்றி எரிந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்.. பரபரப்பு வீடியோ!!

    மத்திய அரசின் இந்த அறிவிப்பு பஞ்சாப் மறுசீரமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் தலைநகர் மீதான பஞ்சாபின் உரிமையை பறிப்பது போல் உள்ளது என்றும் அகாலி தள கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    அமித்ஷாவின் அறிவிப்பு குறித்து மத்திய அரசு அளித்துள்ள விளக்கத்தில், 'சண்டிகரில் ஓய்வு பெறுவோரின் வயது வரம்பு 58-ல் இருந்து 60 ஆக உயரும். கல்வித் துறையில் இருப்பவர்களின் ஓய்வு வயது 65 ஆக உயரும் ஆசிரியர்களின் குழந்தைகளுடைய கல்விக்கான உதவித் தொகை வழங்கப்படும். பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுமுறையை அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை பெற்றுக் கொள்வார்கள்' என்று கூறியுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Aam Aadmi Party, BJP

    அடுத்த செய்தி