• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை அதிரடியாக குறைக்கும் பாஜக ஆளும் மாநிலங்கள்!!

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை அதிரடியாக குறைக்கும் பாஜக ஆளும் மாநிலங்கள்!!

பெட்ரோல்

பெட்ரோல்

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்த நிலையில் அதன் மீதான கலால் வரியை முறையே ரூ.5, ரூ. 10 குறைத்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

  • Share this:
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்று குறைத்து அறிவிப்பு வெளியிட்ட நிலையில், பாஜக ஆளும் மாநிலங்கள் வாட் வரியை குறைத்து வருகின்றன. இதனால், இந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைந்துள்ளது.

    அசாம் அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ரூ. 7 வரை குறைத்து தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பீகாரில் பெட்ரோல் மீதான வாட் வரி லிட்டருக்கு ரூ. 1.30-ம், டீசல் மீதான வரி ரூ. 1.90-ம் குறைக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகாவிலும், வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பெட்ரோல் மீதான வாட் வரியை ரூ. 7-ம், டீசல் மீதான வாட் வரியை ரூ. 7-ம் குறைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அரசுக்கு ரூ. 2,100 கோடி வரை இழப்பு ஏற்படும். கர்நாடகாவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.95.50-க்கும், டீசல் ரூ. 81.50-க்கும் விற்பனையாகும்' என்று கூறியுள்ளார்.

    கோவாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் இங்கு டீசல் லிட்டருக்கு ரூ. 17-ம், பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 12-ம் குறையும். திரிபுராவிலும் அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ரூ. 7 வரை குறைத்துள்ளது. உத்தரகாண்டில் பெட்ரோல் மீதான வாட் வரியை ரூ. 2 குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    Also read:    ச்சீ..ச்சீ.. 300க்கும் மேற்பட்ட பெண்களின் மார்பகங்களை தழுவியதாக பெருமை பேசி வசமாக மாட்டிக்கொண்ட இளைஞர்…

    இதேபோன்று இமாசல பிரதேசம், மணிப்பூர் அரசுகளும் தங்களது வாட் வரியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் மத்திய அரசின் வரிக்குறைப்பை சேர்த்து பெட்ரோலும், டீசலும் ரூ. 12 வரை குறைக்கப்பட்டுள்ளன. பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் புதுச்சேரியிலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. அங்கு பெட்ரோல் விலை 12 ரூபாயும், டீசல் விலை 19 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளன,

    நாட்டில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்த நிலையில் அதன் மீதான கலால் வரியை முறையே ரூ.5, ரூ. 10 குறைத்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. மேலும், மாநில அரசுகள் தங்களுக்கான வாட் வரியை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து, மாநில அரசுகள் வாட் வரியை குறைக்கத் தொடங்கியுள்ளன.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: