முகப்பு /செய்தி /இந்தியா / இந்தியாவின் பணக்கார கட்சியாக உருவெடுத்த பாஜக!

இந்தியாவின் பணக்கார கட்சியாக உருவெடுத்த பாஜக!

BJP

BJP

நாடு முழுவதுமுள்ள 7 தேசியக் கட்சிகளின் மொத்தம் சொத்து மதிப்பு ரூ.6988.57 கோடி எனவும், 44 மாநிலக் கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2129.38 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

2019-20 நிதியாண்டின் கணக்கின்படி அரசியல் கட்சிகளின் சொத்துப்பட்டியலில் ரூ.4847.78 கோடி சொத்துக்களுடன் பாரதிய ஜனதா கட்சி முன்னணியில் உள்ளது. பாஜகவை தொடர்ந்து, பகுஜன் சமாஜ்வாதி கட்சி ரூ.698.33 கோடி சொத்துக்களுடன் இரண்டாவது செல்வாக்கான கட்சியாக உள்ளது.

ஜனநாயக சீர்திருத்தம் தொடர்பான அமைப்பு இந்தியாவில் அரசியல் கட்சிகளின் சொத்துக்கள் குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி நாட்டில் அதிக சொத்துக்களைக் கொண்ட கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உருவெடுத்துள்ளது. 2019-20ஆம் நிதியாண்டு கணக்கின்படி ரூ.4847.78 கோடி சொத்துக்களுடன் பாஜக முன்னணியில் உள்ளது. இது அரசியல் கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பில் 69.37 சதவிகிதம் ஆகும். அதனைத் தொடர்ந்து ரூ.698.33 கோடி சொத்துக்களுடன் பகுஜன் சமாஜ் கட்சியும், ரூ.588.16 கோடி சொத்துக்களுடன் காங்கிரஸ் கட்சியும் உள்ளன.

மேலும் படிக்க: மும்பை சேரி டூ மைக்ரோசாப்ட்... பெண்ணின் தன்னம்பிக்கை பயணம்.. வைரலாகும் வாழ்க்கை கதை!

நாடு முழுவதுமுள்ள 7 தேசியக் கட்சிகளின் மொத்தம் சொத்து மதிப்பு ரூ.6988.57 கோடி எனவும், 44 மாநிலக் கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2129.38 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

44 மாநிலக் கட்சிகளின் முதல் 10 பத்து கட்சிகளின் சொத்து மதிப்பானது ரூ.2028.715 கோடியாக உள்ளது. இது மொத்த சொத்த மதிப்பில் 95.27 சதவீதம் ஆகும்.

2019 - 20 நிதியாண்டில் மாநிலக் கட்சிகளில் சமாஜ்வாதி கட்சி அதிகபட்ச சொத்து மதிப்புடன் ரூ.563.47 கோடி முதலிடத்திலும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ரூ.301.47 கோடி சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்திலும், அதிமுக ரூ.267.61 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

Also read:  Wine என்பது மது கிடையாது - சூப்பர் மார்க்கெட்டில் வைன் விற்பனை நடவடிக்கையை நியாயப்படுத்தும் சஞ்சய் ராவத்!!

First published:

Tags: BJP, Congress