லடாக் விவகாரத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே காரசார வார்த்தை மோதல்
பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் ஒருமுறை கூட பங்கேற்காத ராகுல் காந்தி, ராணுவ வீரர்களின் வீரத்தை கேள்வி கேட்பதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

ராகுல்காந்தி
- News18 Tamil
- Last Updated: July 7, 2020, 1:02 PM IST
பண மதிப்பிழப்பு மற்றும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தவறியது போன்ற பாஜக அரசின் தோல்விகள், ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலின் ஆய்வு பட்டியலில் இடம்பெறும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கூறியிருந்தார்.
இதையடுத்து, அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு தொடர்பான நிலைக்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி ஒருமுறை கூட பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், தேசத்தை குறைகூறுவதாகவும், ராணுவ வீரர்களின் வீரத்தை கேள்வி கேட்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள ஜே.பி.நட்டா, பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவர் செய்யக்கூடாத அனைத்தையும் ராகுல் காந்தி செய்வதாக விமர்சித்துள்ளார்.
Also read... கிரண்பேடி மீது வழக்கு தொடரப்படும் - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
இந்நிலையில், கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு பதிலாக, ராகுல் காந்தி மீது பாஜக அவதூறு பரப்புவதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.