கர்நாடகா தேர்தல்: 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

news18
Updated: April 16, 2018, 6:10 PM IST
கர்நாடகா தேர்தல்: 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக
கர்நாடக தேர்தல்: பா.ஜ.கவின் 2-ஆவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
news18
Updated: April 16, 2018, 6:10 PM IST
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 82 வேட்பாளர்கள் அடங்கிய 2-வது பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டது.

கர்நாடகாவிலுள்ள 224  சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அங்கு தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே, வேட்பாளர்களை தேர்வு செய்வதில் முக்கிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

காங்கிரஸிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பறிக்கும் முனைப்பிலுள்ள பாஜக, கடந்த 8-ஆம் தேதி 72 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. இதில், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பி.எஸ்.எடியூரப்பா, கட்சியின் மூத்த தலைவர்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், 82 வேட்பாளர்கள் அடங்கிய 2-ஆவது பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டது. இத்துடன் சேர்த்து பாஜக சார்பில் போட்டியிடும் 154  வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 218  வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.
First published: April 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்