ஆட்சியமைக்கப்போவதில்லை! பா.ஜ.க அறிவிப்பு - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்

தேவேந்திர பட்னவிஸ் இல்லத்தில் இன்று காலையில் பா.ஜ.க முக்கிய உறுப்பினர்கள் குழுக்கூட்டம் நடைபெற்றது.

ஆட்சியமைக்கப்போவதில்லை! பா.ஜ.க அறிவிப்பு - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்
பா.ஜ.க
  • News18
  • Last Updated: November 10, 2019, 7:06 PM IST
  • Share this:
நாங்கள் ஆட்சியமைக்கப்போவதில்லை என்று ஆளுநரிடம் தெரிவித்துவிட்டோம் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சந்திரகாந்த் பாட்டில் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்ட்ரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24-ம் தேதி வெளியானது. பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வென்றன. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சிவசேனா சார்பில் முதல்வர் பதவி கேட்டு பிடிவாதம் செய்ததால் கூட்டணி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில், தேவேந்திர பட்னவிஸ் இல்லத்தில் இன்று காலையில் பா.ஜ.க முக்கிய உறுப்பினர்கள் குழுக்கூட்டம் நடைபெற்றது.


இதில், மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டில், கிரிஷ் மகாஜன், சுதிர் முன்கந்திவார், அஷிஸ் ஷீலர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆலோசனைக்குப் பிறகு, பா.ஜ.க தலைவர்கள் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியைச் சந்தித்தனர். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திரநாத் பட்னவிஸ், ‘மக்களின் ஆணையை அசிங்கப்படுத்த சிவசேனா விரும்புகிறது. சிவசேனாவுடன் இணைந்து பா.ஜ.கவுக்கு போதிய பெரும்பான்மை இருக்கும்போதிலும், நாங்கள் ஆட்சியமைக்கப்போவதில்லை.

நாங்கள் ஆட்சியமைக்கப்போவதில்லை என்று ஆளுநரிடம் தெரிவித்துவிட்டோம். காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சியமைக்க விரும்பினால், அவர்கள் அதனைச் செய்யலாம். அவர்களுக்கு எங்களுடைய ஆசிர்வாதம் இருக்கும்’ என்று தெரிவித்தார்.

Also see:
First published: November 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்