• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 52 லட்சம் தொலைபேசி அழைப்புகளைப் பெற்ற பாஜக..!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 52 லட்சம் தொலைபேசி அழைப்புகளைப் பெற்ற பாஜக..!

அமித் ஷா

அமித் ஷா

தினமும் வீடு வீடாகச் சென்று பிராசார நோட்டீஸ்களை விநியோகித்து வருகிறார் அமித் ஷா.

  • News18
  • Last Updated :
  • Share this:
    குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக-வுக்கு இதுவரையில் 52 லட்சம் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு திரட்ட வேண்டும் என்ற நோக்கில் பாஜக சார்பில் டோல்ஃப்ரீ தொலைபேசி எண் வெளியிடப்பட்டது. இந்த தொலைபேசி எண்ணுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க மிஸ்டு கால் தரலாம் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து அந்த எண்ணுக்கு நேற்று இரவு 8 மணி வரையில் 52.72 லட்சம் பேர் மிஸ்டு கால் கொடுத்து ஆதரவு அளித்துள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். அமித் ஷா கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 10 நாட்களுக்கான குடியுரிமைச் சட்ட விழிப்புணர்வு பிரசாரத்தைத் தொடங்கினார்.

    இதற்காக தினமும் வீடு வீடாகச் சென்று பிராசார நோட்டீஸ்களை விநியோகித்து வருகிறார் அமித் ஷா. கூடுதலாக பாஜக சார்பில் தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    மேலும் பார்க்க: 'ஒவ்வொரு அடியையும் எதிர்த்துப் போராடுவோம்’- மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: