முகப்பு /செய்தி /இந்தியா / பிரதமர் மோடி குறித்த விமர்சனம் : பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

பிரதமர் மோடி குறித்த விமர்சனம் : பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு எதிராக பாஜக ஆர்பாட்டம்

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு எதிராக பாஜக ஆர்பாட்டம்

பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்த மோடியின் மேடை பேச்சின் வீடியோவையும் பாஜக தலைவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐ.நா பாதுகாப்பு சபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பயங்கரவாதி ஒசோமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு இந்தியாவுக்கு பிரசங்கம் செய்ய அதிகாரம் இல்லை என தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிலாவல் பூட்டோ, பிரதமர் நரேந்திர மோடியை குஜராத் கலவரத்தோடு தொடர்பு படுத்தி கடுமையாக விமர்சித்தார். பிலாவலின் பேச்சு இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. நாட்டின் பல்வேறு மாநில தலைநகரங்களில் பிலாவல் பூட்டோவை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராகவும், பிலாவல் பூட்டோவை கண்டித்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

உத்தரப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரிலும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது பல இடங்களில் பிலாவலின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதேபோல், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானின் பிலாவல் பூட்டோவை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன.

இதையும் படிங்க: பில்கிஸ் பனோ வன்கொடுமை வழக்கு: 11 பேரின் விடுதலையை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

இதனிடையே பிரதமர் மோடி மீதான பாகிஸ்தானின் விமர்சனத்திற்கு காங்கிரஸ் கட்சி மௌனம் சாதிப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. 2013- ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தானின் அப்போதைய பிதரமர் நவாஸ் ஷெரிப், கிராம பெண் என விமர்சித்திருந்தார்.

இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த மோடி, மத்திய அரசும் பாகிஸ்தானை கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்த மோடியின் மேடை பேச்சின் வீடியோவையும் பாஜக தலைவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

First published:

Tags: BJP, Pakistan News in Tamil, PM Modi