Home /News /national /

பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்திய பாஜக

பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்திய பாஜக

பினராயி விஜயன்

பினராயி விஜயன்

தங்கக் கடத்தல் வழக்கிற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலகக்கோரி கோழிக்கோட்டில் உள்ள காவல் ஆணயைர் அலுவலகத்தின் முன் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலகக்கோரி போராட்டம் நடத்திய பாஜகவினரை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர்.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு 30 கிலோ தங்கம் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட வழக்கில், ஸ்வப்னா சுரேஷ் கைதானார். இந்த நிலையில் முதலமைச்சரின் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கும் ஸ்வப்னாவுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து சிவசங்கரை 7 நாள் காவலில் விசாரிக்க சுங்கத்துறை அவரை கைது செய்துள்ளது. இது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தங்கக் கடத்தல் வழக்கிற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலகக்கோரி கோழிக்கோட்டில் உள்ள காவல் ஆணயைர் அலுவலகத்தின் முன் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.



    Also read... தங்கக்கடத்தல் வழக்கில் அரசுக்கு தொடர்பில்லை - கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கம்..

    அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை விரட்டினர்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Chief Minister Pinarayi Vijayan

    அடுத்த செய்தி