Home /News /national /

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மோசடி நடந்ததாக பா.ஜ.க போராட்டம்- பல்வேறு பகுதிகளில் பதற்றம்

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மோசடி நடந்ததாக பா.ஜ.க போராட்டம்- பல்வேறு பகுதிகளில் பதற்றம்

பா.ஜ.க போராட்டம்

பா.ஜ.க போராட்டம்

மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியை எதிர்த்து பா.ஜ.க நடத்தும் போராட்டத்தில் பதற்றம் நிலவுகிறது.

    மேற்குவங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி பாஜகவினர் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வருவதால் பரபரப்பு நிலவுகிறது.

    மேற்குவங்கத்தில் 108 நகராட்சிகளுக்கு நேற்று உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. பிர்பும், ராஜ்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வன்முறை நடந்ததாகவும் பா.ஜ.க குற்றம்சாட்டியுள்ளது.

    ஆனால் மாநிலத்தில் எங்கேயும் வன்முறை நடைபெறவில்லை என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி, 12 மணி நேர முழு அடைப்புக்கு பா.ஜ.க அழைப்பு விடுத்தது. இந்நிலையில், ஏராளமான பா.ஜ.க தொண்டர்கள் ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அரசுப் பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன. தனியார் பேருந்துகளும் இயக்கப்படவில்லை.

    உச்சம் தொடும் போர்... ரஷ்யாவில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தல்

    பலுர்காத் என்ற பகுதியில், பாரதீய ஜனதா கட்சி பிரமுகர்களுக்கும்-திரிணாமுல் கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
    Published by:Karthick S
    First published:

    Tags: BJP

    அடுத்த செய்தி