ஹோம் /நியூஸ் /இந்தியா /

கங்கனா பாஜகவில் சேரலாம்... ஆனால்..? - தேசிய தலைவர் நட்டா வைத்த நிபந்தனை!

கங்கனா பாஜகவில் சேரலாம்... ஆனால்..? - தேசிய தலைவர் நட்டா வைத்த நிபந்தனை!

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா

நடிகை கங்கனா ரனாவத் பாஜகவில் சேர்வது குறித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா கருத்து தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Shimla, India

  இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே இரு முணை போட்டி நடைபெறுகிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெயித்து மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர பாஜக தலைவர்கள் இமாச்சலை முகாமிட்டுள்ளனர்.

  இந்நிலையில், இமாச்சல் தேர்தல் பரப்புரைக்காக சிம்லா வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அரசியல் பிரவேசம் குறித்து நட்டா கருத்து தெரிவித்தார். நடிகை கங்கனா ரனவத் பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். சமீபத்தில் கங்கனா, மக்களும் பாஜகவும் விரும்பினால் தான் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிடத் தயார் எனத் தெரிவித்தார். இது கவனம் பெற்ற நிலையில், கங்கனா கருத்து குறித்து நட்டாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

  அதற்கு பதில் அளித்த நட்டா, "கங்கனா ரனாவத் பாஜகவிற்கு வருவதை வரவேற்கிறோம். கட்சிக்காக யார் உழைக்க விரும்பினாலும் அவர்களுக்கு பாஜக இடமளிக்கும். ஆனால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவது என்பது நான் ஒருவன் எடுக்கும் முடிவல்ல. இது கடும் ஆலோசனைக்கு பிறகே முடிவு செய்யப்படும். அடிமட்ட தொண்டர்கள் தொடங்கி, தேர்தல் கமிட்டி, நாடாளுமன்ற குழு வரை அனைவரிடமும் ஆலோசனை செய்யப்படும்.யார் வேண்டுமானாலும் பாஜகவுக்கு வராலம், ஆனால் அவர்களின் வலிமை என்ன என்பதை கட்சிதான் முடிவு செய்யும்.

  இதையும் படிங்க: 369 அடியில் உலகின் மிக உயரமான சிவன் சிலை..! - ராஜஸ்தானில் திறப்பு

  எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிக்கு உழைக்க வரவேண்டும் என்பதை அனைவருக்கும் கூறிக்கொள்கிறேன்" என்றார்.

  இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: BJP, J.P.Nadda, JP Nadda