குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஏழாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் பாரதிய ஜனதா கட்சி 128 முதல் 148 இடங்களை கைப்பற்றும் என ரிபப்ளிக் - பி மார்க் நிறுவனத்தின் தேர்தலுக்கு கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
காங்கிரஸ் கட்சிக்கு 30 முதல் 42 இடங்களும், ஆம் ஆத்மிக்கு இரண்டு முதல் 10 இடங்களும் கிடைக்கும் என ரிபப்ளிக் கணித்துள்ளது. டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி பாரதிய ஜனதாவிற்கு 131 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்களும், ஆம் ஆத்மிக்கு ஆறு இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : Exit Polls : குஜராத், ஹிமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? - வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
இதேபோல் வாக்கு சதவிகித அடிப்படையில் பார்க்கும் போது பாரதிய ஜனதாவிற்கு 42 சதவிகிதமும், காங்கிரஸ் கட்சிக்கு 30 சதவிகிதமும், ஆம் ஆத்மிக்கு 22 சதவிகிதமும் வாக்குகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
சி-வோட்டர் வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், பாரதிய ஜனதாவிற்கு 128 முதல் 140 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 31 முதல் 43 இடங்களும், ஆம் ஆத்மிக்கு மூன்று முதல் 11 இடங்களும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் எக்ஸ் கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி, பாரதிய ஜனதா 117 முதல் 140 இடங்களையும், காங்கிரஸ் 34 முதல் 51 இடங்களையும், ஆம் ஆத்மி ஐந்து முதல் 13 இடங்களையும் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியா நியூஸ் கருத்துக் கணிப்பின் படி குஜராத்தில் பாஜகவிற்கு அதிகபட்சமாக 49% வாக்குகள் வரை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 28 முதல் 32 சதவிகித வாக்குகளும், ஆம் ஆத்மிக்கு அதிகபட்சமாக 19% வாக்குகளும் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Assembly Election 2022, Election 2022, Gujarat Assembly Election