BJP : நாடு தழுவிய தன்னார்வலர் சேவைகளை தொடங்க பாஜக திட்டம்!

ஜே.பி. நட்டா

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரசாரங்கள், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது உட்பட நாடு தழுவிய தன்னார்வ சேவைகளை பாஜக தொடங்கி இருக்கின்றது.

  • Share this:
கொரோனா 2ஆவது அலை தீவிரமாக இருந்த நேரத்தில், மத்திய அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தோல்வி அடைந்துவிட்டதாக, எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில், கொரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள், கொரோனா நிவாரணங்கள், பணியில் ஈடுபடும் மருத்துவ தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட சமூக பணிகளில், பாஜக தொண்டர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா தடுப்பூசி பிரசாரத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசியை கட்டாயம் போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும், 18 - 44 வயது வரையிலான, தொற்று எளிதில் பாதிக்கப்பட கூடிய வேலைகளைச் செய்பவர்கள், உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப் படுகின்றனர். வீடு வீடாகச் சென்று பொருட்களை வினியோகிப்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், வீட்டு பணி செய்பவர்கள், செய்தித்தாள் மற்றும் சமையல் எரிவாயு வினியோகிப்பவர்கள் அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள, பாஜக தொண்டர்கள் அறிவுறுத்தும்படி, கட்சி தலைமை வலியுறுத்தியுள்ளது.

கொரோனா 3ஆவது அலை, குழந்தைகளை பெரிதும் பாதிக்கும் என கூறப்படும் நிலையில், 12 வயதுக்கு குறைவான சிறுவர்களின் பெற்றோர், அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப் படுகிறது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது குறித்து, கிராமப்புறங்களில் உள்ள மருத்துவ தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்க பாஜக மாநில அளவில் குழுக்களை நியமித்துள்ளது.

இந்நிலையில், ஜே.பி. நட்டாவின் அறிவுறுத்தல்களைக் குறிப்பிட்டு பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங், பாஜக தொண்டர்களுக்குக் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில் அவர், “பாஜக தொண்டர்கள் ரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும். சுற்றியுள்ளவர்களுக்கு ரத்தம் தேவைப்பட்டால் கொடுத்து உதவ வேண்டும். மருத்துவமனைகள் மற்றும் பிற இடங்களில் ரேஷன் மற்றும் உணவு விநியோகத்தை ஏற்பாடு செய்யுங்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட வயதானவர்களைக் கொண்டுள்ள தனி வீடுகளுக்கு உதவும் வகையில் தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும்.

Must Read : ஒரே நாளில் 164.87 கோடி ரூபாய்க்கு மது விற்பனை - சென்னையை முந்திய மதுரை

கொரோனா நோயாளிகள் டெலி மெடிசன் மூலம் மருந்துவ ஆலோசனை மற்றும் உதவிகளைப் பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நமது தன்னார்வலர்கள் உதவ வேண்டும்” என அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
Published by:Suresh V
First published: