ஹோம் /நியூஸ் /இந்தியா /

பாஜகவில் சேர்ந்த மறுநாளே உ.பி மேல்சபை தேர்தலில் போட்டியிட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிக்கு வாய்ப்பு

பாஜகவில் சேர்ந்த மறுநாளே உ.பி மேல்சபை தேர்தலில் போட்டியிட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிக்கு வாய்ப்பு

குஜராத் முதல்வராக மோடி பதவியில் இருந்த போது குஜராத் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாகியாக சர்மா பணிபுரிந்திருக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

உத்தரப் பிரதேச பாஜகவில் நேற்று இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஏ.கே.சர்மாவுக்கு மேல்சபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக அறியப்படுபவரும், குஜராத் மாநில முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஏ.கே.சர்மா நேற்று பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று அவரை மாநில பாஜக தலைவர் உள்ளிட்ட கட்சியினர் வரவேற்றி வாழ்த்தினர்.

உத்தரப்பிரதேசத்தின் மாவ் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.கே.சர்மா, குஜராத் மாநிலத்தின் 1988ம் ஆண்டு பேட்ச் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது அவருக்கு நெருக்கமானவராக திகழ்ந்த சர்மா, பல முக்கிய துறைகளில் பணிபுரிந்திருக்கிறார். பின்னர் மோடி பிரதமரான பின்னரும் இவருக்கு மத்திய அரசில் சில முக்கிய பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் 6 ஆண்டுகள் பணியாற்றியிருப்பதாக தெரிகிறது.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில் வளர்ச்சி கழகத்தின் செயலர் பதவியில் இருந்த ஏ.கே.சர்மா 2020 ஏப்ரலில் விருப்ப ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் பாஜகவில் இணைந்த ஏ.கே.சர்மாவை உத்தரப் பிரதேச மேல்சபை தேர்தலில் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் சர்மாவை அமைச்சராக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், யோகியின் அமைச்சரவையில் உள்கட்டமைப்பு போன்ற முக்கிய துறையினை ஏற்கும் வாய்ப்பும் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத் முதல்வராக மோடி பதவியில் இருந்த போது குஜராத் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாகியாக சர்மா பணிபுரிந்திருக்கிறார். அதன் பின்னரே உள்கட்டமைப்பில் சிறந்த நிர்வாகி என போற்றப்படும் நிலைக்கு அவர் உயர்ந்திருக்கிறார்,. பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலராக 2014ல் நியமிக்கப்பட்ட ஏ.கே.சர்மா, பின்னர் கூடுதல் செயலராக 2017ல் பதவி உயர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Published by:Arun
First published:

Tags: BJP, Modi