5 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை.. சிறுமிக்கு நீதி கேட்டு பாஜகவினர் பாதயாத்திரை

மாதிரிப்படம்

ஒடிசாவில் 5 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சிறுமிக்கு நீதி கேட்டு பாஜகவினர் பாதயாத்திரை நடத்தியுள்ளனர்.

 • Share this:
  ஒடிசா மாநிலத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதில், உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி, பாஜகவினர் பாதயாத்திரை மேற்கொண்டனர். ஒடிசா மாநிலம் நயகார் மாவட்டத்தில், 5 வயது சிறுமி கொல்லப்பட்டு, அச்சிறுமியின் வீட்டு அருகிலேயே புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் உள்ளூர் எம்எல்ஏ மற்றும் அவரைச் சார்ந்தவர் ஒருவரின் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கக் கோரி, அம்மாநில பாஜகவினர் சார்பில் பாதயாத்திரை நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா, உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவிடாமல் தடுக்கும் அமைச்சர் அருண் சாஹு ராஜினாமா செய்யவேண்டும் என வலியுறுத்தினார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: