• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி? - அமித்ஷா விளக்கம்

சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி? - அமித்ஷா விளக்கம்

அமித்ஷா

அமித்ஷா

  • News18
  • Last Updated :
  • Share this:
    மஹாராஷ்டிரா தேர்தலில் சிவசேனா உடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடும் நிலையில், அக்கட்சிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா நியூஸ் 18-க்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணலில் கூறியுள்ளார்.

    மஹாராஷ்டிராவில் வரும் 21-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. கடந்த முறை தனித்துப் போட்டியிட்டு பின்னர் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா உடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்த பாஜக, தற்போது கூட்டணியுடனேயே களமிறங்கியுள்ளது.

    இந்த நிலையில், நியூஸ் 18 குழுமத்தின் தலைமை செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஸிக்கு உள்துறை அமைச்சர் மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அளித்த பேட்டியில், மஹாராஷ்டிராவில் 15 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு, எல்லா வகையிலும் மாநிலத்தை பின்னோக்கி கொண்டு சென்று விட்டதாகவும், பாஜக ஆட்சியில் அனைத்து துறைகளும் முன்னேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாஜக தனி மெஜாரிட்டி பெறும் என்று கூறிய அமித்ஷா, பாஜகவின் ஆட்சியை மக்கள் விரும்புவார்கள் அதனால் பாஜகவையே தேர்வு செய்வார்கள் என்று கூறியுள்ளார்.

    துணை முதல்வர் பதவியை சிவசேனா குறிவைத்துள்ள நிலையில், துணை முதல்வர் மற்றும் முக்கிய துறைகளை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறியிருந்தனர். இது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, “சிவசேனாவின் இந்த கோரிக்கை அச்சுறுத்தல் இல்லை என்று நினைக்கிறேன். பட்நாவிஸ்தான் முதல்வர் என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது. எல்லா வாய்ப்புகளும் இங்கு வெளிப்படையாவே இருக்கிறது” என்று அமித்ஷா கூறினார்.

    மேலும், பல விவகாரங்கள் தொடர்பாக அமித்ஷா பேசியுள்ள நேர்காணல் இன்று இரவு நியூஸ் 18 தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக இருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: