பெட்ரோல், டீசல் விலை உயர்வைப் பற்றி பேசாதீர்கள் - பாஜக மட்டும் பொறுப்பல்ல - நடிகை கவுதமி

பெட்ரோல், டீசல் விலை உயர்வைப் பற்றி பேசாதீர்கள் - பாஜக மட்டும் பொறுப்பல்ல - நடிகை கவுதமி

நடிகை கவுதமி

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாஜக பொறுப்பல்ல என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  புதுச்சேரியில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட தனி ஹெலிகாப்டரில் சென்ற நடிகை கவுதமி இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காரைக்காலில் பிரசாரம் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் பிரசாரத்தைத் துவங்கும் முன் செய்தியாளர்களை சந்தித்தார்.

  அப்போது பேசிய நடிகை கவுதமி, “புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒவ்வொரு இடத்திலும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.. இதனால் மனது நிறைந்திருக்கிறது. வரப்போகும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. தற்போது உள்ள நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற அமோக வாய்ப்பு இருக்கிறது..

  பாஜக தலைவர்களின் கொள்கைகளை பார்த்து 24 ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் இணைந்தேன். நமது தேசத்திற்கு ஏற்ற கட்சி பாஜக தான் என்பதால் பாஜகவில் இணைந்தேன். புதுச்சேரி மக்களுக்கு ஒரு நியாயமான ஆட்சி தேவைப்படுகிறது. அந்த ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி அளிக்கும். இந்த ஆட்சியால் புதுச்சேரிக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையும்.

  கேஸ், பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு பாஜகவுக்கு பொறுப்பல்ல. மத்திய அரசு மட்டும் காரணம் அல்ல. மாநில அரசுகளுக்கும் பொறுப்பு உள்ளது. இது குறித்து பொருளாதாரம் மற்றும் நிதித்துறை சார்ந்தவர்களுடன் கவந்து பேசினால் தெளிவு கிடைக்கும். அது பற்றி இப்போது பேச வேண்டியதில்லை. மக்களுக்கு எல்லாம் புரிந்து விட்டது” என்றார் நடிகை கவுதமி.
  Published by:Sheik Hanifah
  First published:

  சிறந்த கதைகள்