ஹோம் /நியூஸ் /இந்தியா /

தெலங்கானாவில் ஜே.பி. நட்டாவுக்கு கல்லறை... பாஜக கடும் கண்டனம்

தெலங்கானாவில் ஜே.பி. நட்டாவுக்கு கல்லறை... பாஜக கடும் கண்டனம்

ஜேபி நட்டா

ஜேபி நட்டா

டிஆர்எஸ் கட்சியினர் தான் இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டுள்ளனர் என பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Telangana, India

  தெலங்கானாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் போஸ்டர் உடன் கல்லறை அமைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  தெலங்கானாவில் ஆளும்  தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி  கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாஜக குறித்து கடும் விமர்சனங்களை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வைத்து வருகிறார். மேலும், பாஜகவுக்கு மாற்றாக தேசிய அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தும் விதமாக தனது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் பெயரை பாரத் ராஷ்டிர  சமிதி என்று சமீபத்தில் மாற்றம் செய்தார்.

  இந்நிலையில், தெலங்கானா மாநிலம் மல்காபூரில் கல்லறை போன்று அமைக்கப்பட்டு அதன் அருகில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் புகைப்படத்துடன் கூடிய பதாகையும் வைக்கப்பட்டுள்ளது. டிஆர்எஸ் கட்சியினர் தான் இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டுள்ளனர் என பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

  ஆந்திரப் பிரதேச பா.ஜ.க பொதுச் செயலாளர் விஷ்ணுவர்தன் இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்து கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதேபோல், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, இந்திய அரசியலில் புதியதோர் இழிவு அரசியல் என இச்செயலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு தொடரப்போவதாகவும் பாஜக அறிவித்துள்ளது.

  இதையும் படிங்க: ஏசியை இப்படி பயன்படுத்தாதீங்க... ப்ளீஸ்..! - சர்வதேச சுற்றுசூழல் பாதுகாப்பு நிகழ்வில் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

  இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள யாதாத்ரி புவனகிரி மாவட்ட காவல்துறை துணை ஆணையர் நாராயண் ரெட்டி, சமூக வலைதளங்களில் இருந்து தனக்கும் இந்த வீடியோ தெரிந்தது என்றார். "இது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது, ஆனால் இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. முதலில் மண் மேடு உருவாக்கப்பட்டு அதன் மீது பாஜக தலைவரின் ஃப்ளெக்ஸ் அமைக்கப்பட்டதா அல்லது அதற்கு நேர்மாறாக அமைக்கப்பட்டதா என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். என்ன நடந்தது என்பதை அறிய ஒரு குழுவை அனுப்பியுள்ளேன்” என கூறினார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: BJP, JP Nadda, Telangana