பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் அமித் ஷா சந்திப்பு

news18
Updated: July 12, 2018, 3:58 PM IST
பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் அமித் ஷா சந்திப்பு
நித்திஷ்குமார் - அமித் ஷா
news18
Updated: July 12, 2018, 3:58 PM IST
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை, பாஜக தலைவர் அமித் ஷா இன்று சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசினார். 

பீகாரில் பாஜக-வுடன் இணைந்து ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், பாஜக தலைவர் அமித் ஷா, ஒரு நாள் பயணமாக பீகார் வந்துள்ளார்.  பாட்னாவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில்

இந்நிலையில், மாநில முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமாரை அமித் ஷா பாட்னாவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இன்று சந்தித்துப் பேசினார்.

அப்போது, துணை முதலமைச்சர் சுஷில்குமார் மோடி உடனிருந்தார். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதானத் தெரிகிறது.

பாஜகவின் நீண்ட கால கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2009-ஆம் ஆண்டு மக்களவைத்  தேர்தலில் பீகாரில் 20 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக 15 தொகுதிகளில் போட்டியிட்டு 11 இடங்களில் வென்றது. மேலும் 2014 தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த நிதிஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இவர்களுடைய  கூட்டணியில் முறிந்தது.

அதன் பின்பு  நடந்த சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார், லாலுபிரசாத் யாதவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியைப் பிடித்தார். இந்த கூட்டணி முறிந்ததால் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை தக்க வைத்தார்.
First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...