ஹோம் /நியூஸ் /இந்தியா /

'மதமாற்ற விவகாரம் குறித்து தேவையில்லாமல் பேசிவிட்டேன்' - பல்டி அடித்த பாஜக எம்பி

'மதமாற்ற விவகாரம் குறித்து தேவையில்லாமல் பேசிவிட்டேன்' - பல்டி அடித்த பாஜக எம்பி

31 வயதாகும் அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராகவும், பாஜக இளைஞரணியின் தேசிய தலைவராகவும் உள்ளார்.

31 வயதாகும் அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராகவும், பாஜக இளைஞரணியின் தேசிய தலைவராகவும் உள்ளார்.

31 வயதாகும் அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராகவும், பாஜக இளைஞரணியின் தேசிய தலைவராகவும் உள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு மாறியவர்களை, மீண்டும் இந்து மதம் மாற்றுவதற்கு முன்னுரிமை தர வேண்டும் என்று, பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா கூறியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் தனது கருத்தை திரும்ப பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.

  பாஜகவின் இளம் தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி தொழில் முறையில் ஓர் வழக்கறிஞர். 31 வயதாகும் அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராகவும், பாஜக இளைஞரணியின் தேசிய தலைவராகவும் உள்ளார்.

  சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கும் தேஜஸ்வி சூர்யாவின் வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி விடும். அவ்வாறுதான் சமீபத்தில் அவர் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியது.

  உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா மடத்தில் உள்ள ஸ்ரீ ஆத்மர் மடத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று தேஜஸ்வி பேசுகையில், 'இந்து மதத்தைவிட்டு  வெளியேறியவர்களை மீண்டும் இந்து மதத்திற்கே நாம் கொண்டு வர வேண்டும். அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பொருளாதார காரணங்களுக்காக இந்து மதத்தை விட்டு வெளியேறியவர்களையும், மொத்தமாக இந்து மதத்திற்கு திரும்ப வர வைக்க வேண்டும் ' என்று கூறியிருந்தார்.

  இதையும் படிங்க : ஒமைக்ரானை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு போடலாம் - மத்திய அரசு

  அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில், தனது பேச்சை திரும்பப் பெறுவதாக தேஜஸ்வி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து மறுமலர்ச்சி என்ற தலைப்பில் நான் பேசினேன். எனது உரையின் சில கருத்துகள் சர்ச்சையை உருவாக்கியது வருத்தமளிக்கிறது. எனவே அந்த கருத்துக்களை நிபந்தனையின்றி திரும்ப பெறுகிறேன் என்று கூறியுள்ளார்.

  இதையும் படிங்க : ஏலியன்கள் பூமிக்கு வருவார்கள்.. 2022ல் இந்தியாவில் என்னென்ன நடக்கும் - பாபா வாங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள்

  கர்நாடகத்தில் சமீபத்தில்தான் கட்டாய மதமாற்று தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் பாஜக அரசு நிறைவேற்றியது. இந்த நிலையில் தேஜஸ்வி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

  இதையும் படிங்க : ''நடிகை கரீனா கபூரின் மகன் பெயர் என்ன?'' பள்ளி மாணவர்களின் பொது அறிவுத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி

  Published by:Musthak
  First published:

  Tags: BJP, Tejasvi surya