ஹோம் /நியூஸ் /இந்தியா /

விவேகானந்தர் சாகல, பிரதமர் மோடியா மறுபிறவி எடுத்திருக்கார் - பாஜக எம்பி அதிரடி

விவேகானந்தர் சாகல, பிரதமர் மோடியா மறுபிறவி எடுத்திருக்கார் - பாஜக எம்பி அதிரடி

பிரதமர் நரேந்திர மோடி - சுவாமி விவேகானந்தர்

பிரதமர் நரேந்திர மோடி - சுவாமி விவேகானந்தர்

தாய் மரணித்த நேரத்திலும் நாட்டுக்காக உழைத்த மோடியை இந்த நாடே பார்த்து வியந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • West Bengal, India

சுவாமி விவேகானந்தரின் 160 பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடடப்பட்டது. விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ஆம் தேதி தேசிய இளைஞர் நாளாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக மேற்கு வங்க பாஜக சார்பில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பாஜக எம்பி சவுமித்ரகான் பங்கேற்றார். விழாவில் பேசிய அவர், ''முதன்முதலில் இந்தியா பற்றியும் இந்தியர்களின் நாகரீகத்தை பற்றியும் உலகுக்கு சொன்னவர் விவேகானந்தர்.

விவேகானந்தர் போல இன்று இந்தியாவின் வலிமையை பிரதமர் மோடி உலகறியச் செய்துவருகிறார். விவேகானந்தர் இறந்துவிட்டார் என நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். மனிதர்களுக்குத்தான் மரணம் உண்டு. மகான்களுக்கு மரணம் இல்லை. இந்தியா மற்றும் இந்திய மக்களை காப்பாற்ற மோடி வடிவில் விவேகானந்தர் மறுபிறவி எடுத்திருக்கிறார்.

தாய் மரணித்த நேரத்திலும் நாட்டுக்காக உழைத்த மோடியை இந்த நாடே பார்த்து வியந்தது. நவீன இந்தியாவின் விவேகானந்தராக மோடி திகழ்கிறார்'' என்று பேசினார். பிரதமர் நரேந்திர மோடி விவேகானந்தரின் மறுபிறவி என சவுமித்ரகான் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

First published:

Tags: BJP, Narendra Modi, Swami Vivekananda