• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவை இல்லை - பாஜக எம்.பி.

மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவை இல்லை - பாஜக எம்.பி.

மேகதாது

மேகதாது

அடுத்த மாநிலத்தின் அனுமதி கேட்பது, கடிதம் எழுவது, அடுத்த மாநிலத்தை பற்றி நாம் குறை கூறுவது சரியானது அல்ல.

  • Share this:
    கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களை எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவை இல்லை என பாஜக எம்.பி., பிரதாப் சிம்ஹா கூறியுள்ளார்.

    கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், இதற்கு தமிழக அரசும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதேபோல புதுச்சேரி அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசை கண்டித்து வருகிற 5 ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

    அண்ணாமலை


    ஒரு சிறிய செங்கலை கூட வைக்க விடமாட்டோம்

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக அணை கட்ட நினைக்கும் நிலையில், மேகதாதுவிற்கு ஒரு சிறிய செங்கலை கூட வைக்க விடமாட்டோம். தொடர்ந்து தமிழக பாஜக, தமிழக நலன் சார்ந்து செயல்படும். எந்த காரணத்திற்காகவும் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி ஆகஸ்ட்டு 5ஆம் தேதி டெல்டா பகுதியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளோம்” என்று கூறினார்.

    Must Read : குதிரன் சுரங்கப்பாதை திறப்பு: கோவையிலிருந்து கேரளா செல்வோர் ஹேப்பி!

    அப்போது அண்ணாமலையின் போராட்ட அறிவிப்பு குறித்து கருத்து கூறிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “மேகதாது அணை திட்டம் கர்நாடகாவின் உரிமை. அதனை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டோம். அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம் குறித்து எனக்கு கலவை இல்லை. யார் வேண்டுமானாலும் உண்ணாவிரதம் இருக்கட்டும், அல்லது உணவு உண்ணட்டும், எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. காவிரியில் கர்நாடகாவிற்கு உரிமை உள்ளது. அணையின் திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. மேகதாது அணையை கட்டியே தீருவோம்” என்று உறுதிபட கூறியிருந்தார்.

    பிரதாப் சிம்ஹா


    தமிழகத்தின் அனுமதி பெற தேவை இல்லை

    இந்நிலையில், அண்ணாமலையின் இந்த உண்ணாவிரத போராட்ட அறிவிப்பு குறித்து மைசூரு-குடகு தொகுதி பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து சிம்ஹா பேசுகையில், “மேகதாது விஷயத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக அண்ணாமலை உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் நடத்த இருக்கும் உண்ணாவிரத போராட்டம் குறித்து விவாதிப்பது தேவையில்லாத ஒன்று.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    மேகதாதுவில் அணை கட்ட வரைவு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அணை கட்டும் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி பெற தேவை இல்லை. அடுத்த மாநிலத்தின் அனுமதி கேட்பது, கடிதம் எழுவது, அடுத்த மாநிலத்தை பற்றி நாம் குறை கூறுவது சரியானது அல்ல. நமது மாநிலத்திற்கு வேண்டிய பணிகளை நாமே செய்து கொள்ள வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: