மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதியின் எம்பியாக இருப்பவர் பாஜகவின் பிரக்யா சிங் தாக்கூர். பெண் சாமியாரான இவர் அவ்வப்போது சர்ச்சைகுரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர். 2019ஆம் ஆண்டில் இவர் அன்னல் காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவை தேச பக்தன் எனக் கூறி பெரும் சர்ச்சையில் சிக்கினார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் இவர் பேசிய சர்ச்சை கருத்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் இந்து ஜாகரன வேதிகே அமைப்பின் தென்மண்டல மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு பேசிய பிரக்யா தாகூர், “லவ் ஜிகாதிகளிடம் இருந்து நம் இந்து மகள்களை பாதுகாக்க வேண்டும்.வீட்டில் எப்போதும் கூர்மையான ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டும். அது இல்லை என்றால் காய்கறி நறுக்க வைத்துள்ள கத்திகளை கூர்மையாக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
ஏனெனில் எந்த நேரத்தில் என்ன சூழ்நிலை வரும் என்றெல்லாம் நமக்கு தெரியாது. காய்கறிகளை அது நன்றாக நறுக்கினால் அதுபோல நம்முடைய எதிரிகளின் தலையையும், வாயையும் நறுக்கும். அனைவருக்கும் தற்காத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது. நாடு அல்லது வீடு என எதற்கு எதிராக தாக்குதல் நடந்தாலும் அதற்கு உடனே எதிர்வினையாற்ற வேண்டியது நம்முடைய பொறுப்பு என்று பேசினார்.
இவருடைய இந்த பேச்சு மத வெறுப்பையும் வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் பிரக்யா சிங் தாக்கூர் கருத்து சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு இவ்வளவு கடன் இருக்கா? நிலவரத்தை தெளிவாக சொன்ன மத்திய நிதியமைச்சகம்
கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருப்பதால் உள்ளூர் காவல்துறை நடவடிக்கை எடுக்காது. எனவே, நான் உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளேன் என்றார். இந்நிலையில், சிவமோகா காவல்துறை பிரக்யா சிங் தாக்கூர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் புகாரின் பேரில் பிரக்யா சிங் மீது இபிகோ 153A பிரிவின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.