மக்களவையில் 'கோட்சே தேசபக்தர்' என்று பேசிய பா.ஜ.க எம்.பி பிரக்யா தாகுர் நீக்கம்

மக்களவையில் பிரக்யா தாக்கூரின் கருத்துக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

மக்களவையில் 'கோட்சே தேசபக்தர்' என்று பேசிய பா.ஜ.க எம்.பி பிரக்யா தாகுர் நீக்கம்
பிரக்யா தாகுர்
  • News18 Tamil
  • Last Updated: November 28, 2019, 11:18 AM IST
  • Share this:
மக்களவை விவாதத்தின் போது 'கோட்சே தேசபக்தர்' என பேசிய பிரக்யா சிங் தாகுர் மக்களவை பாதுகாப்பு விவகாரங்களுக்கான குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாத்தின் போது பேசிய தி.மு.க மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, ‘மகாத்மா காந்தியின் மீது நாதுராம் கோட்சே அவர் கொண்டிருந்த சித்தாந்ததின் காரணமாக 32 ஆண்டுகள் காழ்ப்புணர்ச்சியில் இருந்தார். அதனால்தான் அவரைக் கொல்வதற்கு முடிவெடுத்தார்’ என்று பேசினார்.

அப்போது குறுக்கிட்ட பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாகுர், ’தேசபக்தர் குறித்து நீங்கள் உதாரணம் கூறக்கூடாது’ என்று பேசினார். அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்களவையில் பிரக்யா தாகுரின் கருத்துக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.


பாஜக செயல் தலைவர் ஜே.பி.நாட்டாவும் கண்டன் தெரிவித்த நிலையில் மக்களவை பாதுகாப்பு விவகாரங்களுக்கான குழுவிலிருந்து பிரக்யா தாகுர் நீக்கப்பட்டுள்ளார்.
First published: November 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்