முகப்பு /செய்தி /இந்தியா / உடன்கட்டை ஏறுதலை பெருமையாக பேசிய பாஜக எம்.பி.. திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளி!

உடன்கட்டை ஏறுதலை பெருமையாக பேசிய பாஜக எம்.பி.. திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளி!

பாஜக எம்பி ஜோஷி

பாஜக எம்பி ஜோஷி

திமுக எம்.பி ஆ.ராசா பாஜக எம்பி இருக்கையை நோக்கி சென்றதால் அசாதாரண சூழல் நிலவியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

சதி என்னும் உடன்கட்டை ஏறுதல் சடங்கை பெருமைப்படுத்தும் விதமாக பாஜக எம்.பி ஜோஷி பேசியதைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அதானி குழும விவகாரத்தால் மாநிலங்களவை நடவடிக்கையும் பாதிக்கப்பட்டது.

மக்களவை கூடியதும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் தொகுதி பாஜக எம்பி ஜோஷி, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். தனது சொந்த மாநிலத்தின் பெருமைகளை குறிப்பிட்டு பேசிய ஜோஷி, முகமதிய மன்னர் அலாவுதீன் கில்ஜியிடம் தங்கள் முகத்தைக் காட்டுவதற்கு பதிலாக, 1,600 பெண்கள் நெருப்பில் குதித்த தேசத்திலிருந்து தான் வந்திருப்பதாக பெருமையுடன் கூறினார். இதனால், ஆவேசமடைந்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் சபாநாயகர் இருக்கை முன்பு வந்து முழக்கங்களை எழுப்பினர்.

உடன்கட்டை ஏறுதல் சடங்கை பெருமைப்படுத்தும் விதமாக பாஜக எம்பி பேசியதைக் கண்டித்து முழக்கமிட்டனர். அப்போது, திமுக எம்.பி ஆ.ராசா பாஜக எம்பி இருக்கையை நோக்கி சென்றதால் அசாதாரண சூழல் நிலவியது. உறுப்பினர்கள் அனைவரையும் இருக்கைக்கு செல்லும்படி சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார்.

மாநிலங்களவையில் அதானி குழும முறைகேடு குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பியதால் அவை நடவடிக்கை முடங்கியது. இதையடுத்து, அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

First published:

Tags: A Raja, BJP MP, Lok sabha, Parliament