Home /News /national /

விளையாட்டு நிகழ்ச்சியில் மல்யுத்த வீரரின் கன்னத்தில் 'பளார்' விட்ட பாஜக எம்.பி.

விளையாட்டு நிகழ்ச்சியில் மல்யுத்த வீரரின் கன்னத்தில் 'பளார்' விட்ட பாஜக எம்.பி.

விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக எம்.பி. பிரிஜ்பூஷன் சிங் மல்யுத்த வீரர் ஒருவரின் கன்னத்தில் பளாரென அறைந்துள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் தேசிய மல்யுத்த போட்டிகள் நடைபெற்றன. இதில், உத்தர பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் மக்களவை தொகுதி எம்.பி. பிரிஜ்பூஷன் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராகவும் பொறுப்பில் இருக்கிறார்.

    இதையும் படிங்க : Year Ender 2021- 2021- ஜோ ரூட்டின் ஆண்டு- டாப் 10 பேட்டர்கள்

    இந்நிலையில் போட்டியின்போது மல்யுத்த வீரர் ஒருவரது கன்னத்தில் எம்.பி. பிரிஜ்பூஷன் பளார் என அறை விட்டுள்ளார். விழா மேடையில் அவர் நிதானம் இழந்த சம்பவம் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

    எம்.பி. எதற்காக அடித்தார் என்ற காரணம் தற்போது தெரியவந்திருக்கிறது. அதாவது இந்த மல்யுத்த போட்டியில் 15 வயதுக்கு உட்பட்டவர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று விதி உள்ளது.

    இதையும் படிங்க :  தனியார் தொழிற்சாலை பெண் ஊழியர்களின் நிலை என்ன? - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விளக்கம்

    ஆனால், கன்னத்தில் அறை வாங்கியவர் கூடுதல் வயது காரணமாக போட்டியில் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவர் எம்.பி.யை தனக்கு தெரியும், அவர்தான் தன்னை போட்டியில் கலந்து கொள்ளச் சொன்னதாக விழா நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.

    இந்த விபரம் எம்.பி.க்கு தெரியவர, அவர் நிதானம் இழந்து அந்த நபருக்கு அறை கொடுத்துள்ளார்.

    வீடியோவை பார்க்க...

    இதையும் படிங்க : தலைமைச் செயலகம் என்ன சுற்றுலா பயணியர் விடுதியா..?- முதல்வருக்கு பறந்த புகார்

    Published by:Musthak
    First published:

    Tags: BJP

    அடுத்த செய்தி