சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்? கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு

இதற்கிடையில், ராஜினாமா கடிதம் அளித்த 15 பேரையும் மீண்டும் தேர்தலில் நிற்கவிடாமல் செய்வதற்காக அவர்கள் ராஜினாமா கடிதம் இதுவரையில் ஏற்கப்படாமல் இருந்துவருகிறது.

news18
Updated: July 27, 2019, 7:09 PM IST
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்? கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு
கர்நாடக சட்டப்பேரவை(மாதிரிப் படம்)
news18
Updated: July 27, 2019, 7:09 PM IST
கர்நாடகா மாநில சபாநாயகர் ரமேஷ் குமாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கு பா.ஜ.க முடிவு செய்துள்ளது.

கர்நாடகாவில் நடைபெற்றுவந்த காங்கிரஸ், மதச்சார்பற்ற கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் கடந்த சில தினங்களுக்கு முன் ராஜினாமா கடிதம் அளித்தனர். அதனையடுத்து, குமாரசாமி அரசின் மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால் அவருடைய ஆட்சி கவிழ்ந்தது.

அதனையடுத்து, மீண்டும் நேற்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். இதற்கிடையில், ராஜினாமா கடிதம் அளித்ததில் 14 பேரையும் மீண்டும் தேர்தலில் நிற்கவிடாமல் செய்வதற்காக அவர்கள் ராஜினாமா கடிதம் இதுவரையில் ஏற்கப்படாமல் இருந்துவருகிறது. மேலும், ராஜினாமா கடிதம் அளித்தவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கும் அவர் நடவடிக்கை எடுத்துவருகிறார்.


கர்நாடகாவில் 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் - அதிரடி காட்டிய சபாநாயகர்

முன்னதாக, கடந்த வியாழக்கிழமை, அதிருப்தி எம்.எல்.ஏகளில் 3 பேரை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அதனால், மற்ற எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வதற்கு முன்னதாக ரமேஷ் குமாரை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க, அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கு பா.ஜ.க முடிவு செய்துள்ளது.

திங்கள்கிழமை, சட்டசபை கூடியதும் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கு பா.ஜ.க முடிவு செய்துள்ளது. அதனால், கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Loading...

Also see:

First published: July 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...