முகப்பு /செய்தி /இந்தியா / மீன்வளத்துறை அமைச்சகம் இருப்பதே தெரியாமல் உளறும் ராகுல் காந்தி - பாஜகவினர் கடும் தாக்கு

மீன்வளத்துறை அமைச்சகம் இருப்பதே தெரியாமல் உளறும் ராகுல் காந்தி - பாஜகவினர் கடும் தாக்கு

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

மத்திய அரசு கடந்த 2019 மே 31-ம் தேதியே மீன்வளத் துறைக்கு புதிய அமைச்சகத்தை உருவாக்கியது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

  • Last Updated :

மீனவர்கள் நலனுக்கான மீன்வளத்துறை அமைச்சகம் ஏற்கனவே இருப்பது கூட தெரியாமல் ராகுல் காந்தி மீனவர் மத்தியில் உளறி உள்ளார் என பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பரபரப்பான அரசியல் சூழலுக்கு நடுவே காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி-யுமான ராகுல்காந்தி ஒரு நாள் பயணமாக இன்று புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார். இதற்கான சென்னை விமான நிலையத்திற்கு வந்த ராகுல்காந்தி சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அதன்பின் அங்கிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.

புதுச்சேரி சென்ற ராகுல் காந்தி முத்தியால்பேட்டையில் மீனவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு 3 சட்ட மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது. மீனவர்கள் கூட்டத்தில் விவசாயிகள் பற்றி நான் ஏன் பேசுகிறேன்? என உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். நான் உங்களை கடல் விவசாயிகளாக கருதுகிறேன். மத்தியில் நில விவசாயிகளுக்கு அமைச்சகம் இருக்கும்போது, கடல் விவசாயிகளுக்கு ஏன் அவ்வாறு இல்லை? மீனவர்களின் குறைகளை தீர்ப்பதற்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும்'' என்றார்.

இந்நிலையில் ராகுல்காந்தி மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி இருப்பதை வலியுறுத்தி இருப்பதை மேற்கோள்காட்டி மத்திய மீன்வள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சராக இருக்கும் கிரி ராஜ் சிங் ட்வீட் செய்துள்ளார். அதில் மத்திய அரசு கடந்த 2019 மே 31-ம் தேதியே மீன்வளத் துறைக்கு புதிய அமைச்சகத்தை உருவாக்கியது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இந்த அமைச்சகம் மூலம் மீனவர்களுக்கு இதுவரை 3683 கோடி ரூபாய் அரசு செலவிட்டுள்ளது என்றுள்ளார்.

மேலும், ராகுல் ஜி!மேலும், ராகுல் ஜி!புதிய மீன்வளத்துறைக்கு வருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் அல்லது நான் வரும் இடத்திற்கு என்னை அழைக்கவும். நாடு முழுவதும் புதிய மீன்வள அமைச்சகம் மற்றும் புதுச்சேரி நடத்தி வரும் திட்டங்கள் குறித்து நான் உங்களுக்கு சொல்கிறேன் என்றுள்ளார்.

top videos

    மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் ஏற்கனவே இருப்பது தெரியாமல் அதை அமைக்க வேண்டும் என்று பேசிய ராகுலின் கருத்தை பலர் விமர்சித்து வருகின்றனர்.

    First published:

    Tags: Congress, Rahul gandhi