அவசரநிலை பிரகடனத்தின் போது ஜனநாயக அமைப்புகள் நசுக்கப்பட்டன: ராகுல் காந்தியின் கருத்து நகைப்புக்குரியது என பாஜக பதிலடி!

ராகுல் காந்தி

ராகுல் காந்தி அவசர நிலை பிரகடனத்தின் போது ஜனநாயக அமைப்புகள் பலவீனமடையவில்லை என்று கூறியுள்ளார். அவரது கருத்துக்கள் நகைப்புக்குரியவை.

  • Share this:
அவசரநிலை குறித்து ராகுல் காந்தி பேசியுள்ளது நகைப்புக்குரியது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

1975-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலை பிரகடனம் (எமர்ஜென்சி) தவறுதான் என்று ராகுல் காந்தி ஒப்புக் கொண்டார். கார்னெல் பல்கலைக் கழக பொருளாதாரத் துறைப் பேராசிரியரும், மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது பொருளாதார ஆலோசகராகவும் இருந்த கவுஷிக் பாசுவிடம் ராகுல் காந்தி ஆன்லைன் உரையாடல் மேற்கொண்ட போது இதனை தெரிவித்தார்.

ஜனநாயகம் பற்றி ராகுல் காந்தி கூறிய போது, ‘ஜனநாயகம் அரிக்கப்படுவது மட்டுமல்ல குரல்வளை நெரிக்கப்படுகிறது. நரேந்திர மோடி அரசு 2014-ல் ஆட்சியமைத்தது முதல் ஜனநாயகக் குரல்வளை நெரிக்கப்படுகிறது’ என்றார்.

மேலும் எமர்ஜென்சி பற்றிய கேள்விக்கு, “ஆம், அது தவறுதான், என் பாட்டி இந்திரா காந்தியும் இதைக் கூறுவார். காங்கிரஸ் கட்சி இந்தியாவின் ஜனநாயக அமைப்புகளை ஒரு போதும் கட்சி சார்பாக பிடித்து வைத்ததில்லை. உண்மையில் கூற வேண்டுமெனில் காங்கிரஸ் கட்சிக்கு அந்தத் திறமை இல்லை. எங்கள் வடிவமைப்பு எங்களை அப்படி செய்ய விடாது, நாங்கள் விரும்பினாலும் எங்கள் கட்சியின் வடிவமைப்பு அதைச் செய்ய அனுமதிக்காது.” என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.

எமர்ஜென்சி தொடர்பான ராகுல் காந்தியின் கருத்து தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ராகுல் காந்தி அவசர நிலை பிரகடனத்தின் போது ஜனநாயக அமைப்புகள் பலவீனமடையவில்லை என்று கூறியுள்ளார். அவரது கருத்துக்கள் நகைப்புக்குரியவை. அந்த காலகட்டத்தில் அனைத்து அமைப்புகளையும் இந்திரா காந்தியின் அரசு நசுக்கியது. எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். அனைத்து கட்சிகளும் தடை செய்யப்பட்டது. பத்ரிகைகளும் மூடப்பட்டன.

ஆர்.எஸ்.எஸ் குறித்து ராகுல் காந்தி புரிந்துகொள்வதற்கு நீண்ட காலம் தேவைப்படும். உலகிலேயே தேசபக்தியை கற்பிக்கும் மிகப்பெரிய பள்ளிக்கூடம் ஆர்.எஸ்.எஸ் தான் என ஆர்.எஸ்.எஸ் தொடர்பான ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு பதிலடி தரும் வகையில் ஜவடேகர் பேசினார்.
Published by:Arun
First published: