ஹோம் /நியூஸ் /இந்தியா /

சட்டப்பேரவையில் புகையிலை பயன்படுத்திய பாஜக எம்.எல்.ஏ - வைரலாகும் வீடியோ

சட்டப்பேரவையில் புகையிலை பயன்படுத்திய பாஜக எம்.எல்.ஏ - வைரலாகும் வீடியோ

பாஜக எம்.எல்.ஏக்கள்

பாஜக எம்.எல்.ஏக்கள்

பாஜக எம்.எல்.ஏ ராகேஷ் குமார் கோஸ்வாமி அவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தனது செல்போனில் விளையாடும் வீடியோவும் வெளியானது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Lucknow, India

  உத்தரபிரதேச சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் புகையிலை பயன்படுத்தும் வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  உத்தரபிரதேச சட்டப்பேரவையின் மலைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் போது பாஜக எம்.எல்.ஏ ரவி ஷர்மா, புகையிலையை பயன்படுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

  மேலும் பாஜக எம்.எல்.ஏ ராகேஷ் குமார் கோஸ்வாமி அவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தனது செல்போனில் விளையாடும் வீடியோவும் வெளியானது.

  இதற்கு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. அவையின் மாண்பை குழைக்கும் வகையில் பாஜக எம்.எல்.ஏக்கள் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் மக்கள் கேட்கும் கேள்வி பதில் சொல்லாத பாஜகவினர், சட்டப்பேரவையை கேலிக்கை விடுதி போல பயன்படுத்தி வருவதாக கடுமையாக சாடியுள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: BJP MLA, Online rummy, Tobacco, Uttar pradesh